தேவையான பொருட்கள்

 

1 கப் இலை நறுக்கியது,1 கப் சோள மாவு, 1 கப் சர்க்கரை, 3 கப்தண்ணீர்,1 தேக்கரண்டிஏலக்காய் தூள், 2 டீஸ்பூன் நறுக்கிய முந்திரி,2-3 தேக்கரண்டிநெய்,1 சிட்டிகைபச்சை நிறம்( food color powder )

 

பொதுவாக இனிப்பு என்றாலே நம் எல்லோருக்கும் பிடிக்கும். அதிலும் ஹல்வா என்றால் சொல்லவா வேண்டும். அதன் நாக்கில் வைத்ததும் கரைகின்ற சுவையை நிச்சயம் எல்லோருமே விரும்புவோம். ஹல்வாவில் ஏராளமான வகை உள்ளன. கேரட் ஹல்வா, பீட்ரூட் ஹல்வா, பிரட் ஹல்வா, திருநெல்வேலி ஹல்வா, கோதுமை ஹல்வா என பல வகை ஹல்வா உள்ளன. இவைகளை நான் சுவைத்தும் இருப்போம்.

 

ஆனால், நீங்கள் வாழை இலை ஹல்வாவை சுவைத்தது உண்டா?. அதன் பிளேவர் மற்றும் சுவை அட்டகாசமாக இருக்கும்.  வாழை இலை சூடாக உணவு சாப்பிடுவது உடலுக்கு நல்லது என படித்திருப்போம். ஆம் வாழை இலை மருத்துவ குணங்கள் நிறைந்தது என சொல்லப்படுகின்றது. வாழை இலையில் எப்படி சுவையான ஹல்வா செய்வதென்று பார்க்கலாம் வாங்க. 

 

செய்முறை

 

வாழை இலையை ஒரு கப் தண்ணீருடன் அரைத்து வடிகட்டவும். பச்சை உணவு வண்ண பொடியை ஒரு சிட்டிகை சேர்க்க வேண்டும்.

 

இப்போது  சோளமாவை  இரண்டு கப் தண்ணீருடன் சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்கு கரைத்துக்கொள்ளவும்

 

அடுப்பில் கெட்டியான அடி கடாயை வைத்து, அதில்  2 டீஸ்பூன் நெய்யை விட்டு வாழை இலை சாறு மற்றும் கரைத்து வைத்த சோள மாவை அதில் ஊற்றி கிளறி, சிறிது கெட்டியானதும் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். பின் 1 டீஸ்பூன் நெய் விட்டு நன்கு கலக்கவும். இப்போது இந்த கலவை ஹல்வா பதத்திற்கு வரும் வரை நன்கு கிளறி விட்டு, ஹல்வா பதம் வந்த உடன்  ஏலக்காய் தூள் மற்றும் நறுக்கிய பருப்புகளை சேர்த்து நன்கு கிளறவும்.

 

ஒரு தட்டை எடுத்த அதில் நெய்  தடவி தயாரான ஹல்வாவை தட்டில் ஊற்றவும். ஆற வைத்து பிறகு துண்டுகளாக வெட்டி பரிமாறவும். இந்த வாழை இலை ஹல்வாவின் சுவை வித்யாசமானதாகவும் சுவையானதாகவும் இருக்கும். 

 

மேலும் படிக்க,