Hydrabadi Green Chicken: சிக்கன் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. சாப்பிட பிடித்த சிக்கனை வேற லெவல் மற்றும் ஸ்டைலில் செய்து வீட்டில் இருப்பவர்களை அசத்தலாம். சப்பாத்திக்கு சரியான சைட்டிஷாக ஹைதராபாத் கிரீன் சிக்கன் செய்து ஒரு பிடி பிடிக்கலாம். ஹைதராபாத் கிரீன் சிக்கன் ரெசிபி செய்வதற்கான பொருட்கள் மற்றும் செய்முறை எப்படி என்பதை தெரிந்து கொள்வோம்.
ஹைதராபாத் கிரீன் சிக்கன் ரெசிபி செய்யும் முறை:
சிக்கன் - அரை கிலோ, இஞ்சி - ஒரு துண்டு, பூண்டு - 10 பல், முந்திரி - 15, கொந்தமல்லி - ஒரு கைப்பிடி, புதினா - ஒரு கப், பச்சை மிளகாய் - 5, மிளகு தூள் - 2 டேபிள் ஸ்பூன், உப்பு - தேவையான அளவு, லெமன் ஜூஸ் - 1, தயிர் - 1 கப், எண்ணெய் - அரை கப், மிளகு - 5, இலவங்கம் - 4, பட்டை - 1, ஏலக்காய் - 3, வெங்காயம் - 3, மஞ்சள் தூள் - ஒரு டேபிள் ஸ்பூன், மல்லி தூள் - 1டேபிள் ஸ்பூன், கரம் மசாலா - 1 டேபிள் ஸ்பூன்.
ஹைதராபாத் கிரீன் சிக்கன் ரெசிபி செய்முறை:
முதலில் சிக்கனை நன்றாக கழுவி எடுத்து வைத்து கொள்ள வேண்டும். பின்னர் மிக்சி ஜாரில் பூண்டு, இஞ்சி, முந்திரி, பச்சை மிளகாய், மொத்தமல்லி, புதினா போட்டு, அதனுடன் ஒரு கியூப் ஐஸ்கட்டியை சேர்த்து நன்றாக அரைத்து கொள்ள வேண்டும். பின்னர், ஒரு பவுலில் சிக்கனை போட்டு அதனுடன் அரைத்து வைத்துள்ள கலவையை சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும். அதனுடன் ஒரு கப் தயிர், ஒரு லெமன் ஜூஸ் மற்றும் மிளகுதூள், தேவைக்கு ஏற்ப உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து சிறிது நேரம் ஊறவைக்க வேண்டும்.
அரை மணி நேரத்திற்கு பிறகு கடாயில் எண்ணெய் விட்டு, அது காய்ந்ததும் பட்டை, இலவங்கம், பிரியாணி இலை, ஏலக்காய் போட்டு தாளித்து அதனுடன், பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக நறுக்க வேண்டும். 5 நிமிடத்திற்கு பிறகு ஊற வைத்திருக்கும் சிக்கனை எடுத்து கடாயில் சேர்த்து கிளறி விட வேண்டும். அதனுடன் மிளகுதூள், மல்லிதூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கிளறி விட்டு மூடிவிட வேண்டும். 10 நிமிடங்களுக்கு பிறகு சிக்கனில் எண்ணெய் பிரிந்து வந்ததும், இறக்கி விட வேண்டும்.
இந்த ஹைதராபாத் கிரீன் சிக்கன் கிரேவியை சப்பாத்தி, பரோட்டா கூட வைத்து சாப்பிட்டால் மீண்டும், மீண்டும் சாப்பிட தூண்டும்.
மேலும் படிக்க: Afghani Creamy Chicken Gravy: நாவில் எச்சில் ஊறும் ஆஃப்கானி கிரீமி சிக்கன் கிரேவி .. செய்வது எப்படி..?