வேர்கடைலை ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது என்று நம் எல்லோருக்கும் தெரியும். இது சுவை மிகுந்ததும் கூட. வேர்க்கடலை பர்பி மிகவும் பிரபலம். இப்போது வேர்கடலையில் செய்யப்பட்ட ஸ்னிக்கர்ஸ் சாக்லேட் பார்கள் கடைகளில் கிடைக்கின்றன. இனி நீங்கள் ஸ்னிக்கர்ஸ் சாப்பிட ஆசைப்பட்டால் கடைக்கு செல்ல வேண்டியதில்லை, வீட்டிலேயே செய்து சாப்பிடலாம். குறைந்த நேரத்திலேயே எளிதில் இதை செய்து விட முடியும்.  வாங்க ஸ்னிக்கர்ஸ் எப்படி செய்வதென்று பார்க்கலாம்...


தேவையான பொருட்கள்



  • 1 கப் பேரீச்சைப்பழம்

  • 1.5 டீஸ்பூன் வேர்க்கடலை வெண்ணெய்

  • உப்பு, சுவைக்க

  • 1 தேக்கரண்டி வெண்ணிலா எசன்ஸ்

  • 1 கப் ஓட்ஸ்

  • 1/4 கப் வறுத்த வேர்க்கடலை

  • 150 கிராம் டார்க் சாக்லேட், உருகியது


செய்முறை


1. முதலில், நாம் கேரமல் தயாரித்துக்கொள்ள வேண்டும். இதற்கு, ஒரு கிண்ணத்தில் கொதிக்கும் நீரில் பேரிச்சம்பழம் சேர்த்து, சுமார் 20-25 நிமிடங்கள் விடவும் அப்படியே விட்டு விட வேண்டும். இப்போது, ​​தண்ணீரை வடிகட்டி, பேரிச்சம்பழங்களை மிக்ஸி கிரைண்டருக்கு மாற்றி, வேர்க்கடலை வெண்ணெய் என்னும் பீனட் பட்டர் வெண்ணிலா எசன்ஸ் மற்றும் உப்பு சேர்த்து மென்மையான கேரமல் சாஸ் தயாரிக்க வேண்டும்.

 

2.ஒரு கிண்ணத்திற்கு மாற்றி விட வேண்டும். இந்த கலவையில் ¼ பாகத்தை ஒதுக்கி வைத்து விட வேண்டும். ஸ்னிக்கர் பாரின் கீழ் அடுக்கை தயார் செய்ய, ஓட்ஸ் மற்றும் நாம் ஒதுக்கி வைத்திருந்த கேரமல் கலவையை கிரைண்டரில் சேர்த்து மாவு போன்று நன்கு மசிய அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

 

3.இப்போது, ​​ஒரு செவ்வக பேக்கிங் டின்னை எடுத்து பேக்கிங் பேப்பரை அதில் பரப்ப வேண்டும். அதன் மீது ஓட்ஸ் கலவையை சமமாக பரப்ப வேண்டும். இதன் மீது கேரமல் சாஸை பரப்ப வேண்டும். மேலே சில துண்டுகளாக்கப்பட்ட வேர்க்கடலையை அலங்கரித்து சுமார் 3 மணிநேரம் அப்படியே உறைய வைக்கவும்.

 

4. முடிந்ததும், தயாரிக்கப்பட்ட ஸ்னிக்கருக்கான அடிப்பகுதியை, உருகிய டார்க் சாக்லேட் கிண்ணத்தில் நனைத்து பேக்கிங்(baking) பேப்பருக்கு மாற்றவும். பரிமாறும் முன் சுமார் ஒரு மணி நேரம் உறைய வைக்கவும். அவ்வளவுதான் சுவையான ஸ்னிக்கர் பார் தயார். 

 

மேலும் படிக்க