ஆஃப்கானி கிரீமி சிக்கன் கிரேவி....
Afghani Creamy Chicken Gravy: சிக்கன் விரும்பாதவர்கள் இருக்கவே முடியாது. சிக்கன் 65, சிக்கன் ஃப்ரை, சிக்கன் கிரேவி என செய்து சாப்பிட்டவர்கள் கொஞ்சம் வித்யாசமாக சாப்பிட விரும்பினால் ஆஃப்கானி கிரீமி சிக்கன் கிரேவியை செய்து ருசி பார்க்கலாம். எத்தனை நாட்களுக்கு தான் ஒரே மாதிரியான ரெசிபி செய்து சாப்பிடுவது என அலுத்து கொண்டால், நாடு கடந்து ஆஃப்கானிஸ்தானில் செய்யும் சிக்கன் கிரேவி செய்து சப்பாத்தி, இட்லி, தோசைக்கு செய்து சப்பிட்டலாம்.
ஆஃப்கானி கிரீமி சிக்கன் கிரேவி செய்ய தேவையான பொருட்கள்:
நெய்- தேவையான அளவு அல்லது எண்ணெய் தேவையான அளவு, பட்டை, இலவங்கம், ஏலக்காய், அன்னாசி பூ, - தேவையான அளவு, சிக்கன் - அரை கிலோ, மிளகாய்தூள், மிளகு தூள், உப்பு, மஞ்சள் -காரத்திற்கு ஏற்ப தேவையான அளவு, பெரிய வெங்காயம் - 1, பூண்டு - 6, பச்சைமிளகாய் - 4, இஞ்சி சிறிய துண்டு, முந்திரி - 10 துண்டு, கொத்தமல்லி - ஒரு கைப்பிடி, புதினா - ஒரு கைப்பிடி, தயிர் - ஒரு கப், கிரீம் மில்க்- ஒரு கப்.
ஆஃப்கானி கிரீமி சிக்கன் செய்யும் முறை:
முதலில் கடாயில் 4 டியூஸ்பூன் நெய் விட்டு சூடானதும் அதனுடன் ஒரு பட்டை, 4 இலங்கம் மற்றும் 4 ஏலக்காய், அன்னாசி பூ போடவேண்டும். அதனுடன் நன்றாக கழுவி வைத்துள்ள சிக்கனை போட்டு திருப்பி எடுக்க வேண்டும். நெய்யில் சிக்கன் ஃபிரை ஆனதும், அதனுடன் காரத்திற்கு ஏற்ப மிளகாய் தூள், மிளகுதூள், மஞ்சள் தூள், மற்றும் உப்பு சேர்த்து நன்றாக திருப்பி விட வேண்டும். 5 நிமிடங்கள் மூடி சிக்கனை வேக வைக்க வேண்டும்.
அதற்குள் மிக்ஸி ஜாரில், நறுக்கிய பெரிய வெங்காய, 6 பல் பூண்டு, ஒரு துண்டு இஞ்சி, 10 முந்திரி, ஒரு கைப்பிடி கொத்தமல்லி, ஒரு கைப்பிடி புதினா, 4 பச்சைமிளகாய் மற்றும் ஒரு கப் தயிர் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்து கொள்ள வேண்டும். இந்த கலைவையை, சிக்கனில் போட்டி நன்றாக திருப்பி விடவேண்டும். 5 நிமிடத்திற்கு பிறகு கெட்டியான கிரீம் மில்க் ஒரு கப் சேர்த்து கிளறி விட வேண்டும். 5 நிமிடத்திற்கு பிறகு, கிரேவியில் இருக்கும் சிக்கனை மட்டும் தனியே எடுத்து வானலில் எண்ணெய் வீட்டை அதை மட்டும் டீப் ஃபிரை செய்து கொள்ள வேண்டும். டீப் ஃபிரை செய்த சிக்கனை மீண்டும் சிக்கன் கிரேவியில் போட்டி கிளறி விட்டு, அதன் மேலே ஒரு கைப்பிடி கொத்தமல்லியை தூவி இறக்க வேண்டும். இப்போது ஆஃப்கானி கிரீமி சிக்கன் கிரேவி ரெடி.
இந்த ஆஃப்கானி கிரீமி சிக்கன் கிரேவியை சப்பாத்திக்கு சைட்டிஷாக வைத்து சாப்பிட்டால் சூப்பர் டேஸ்ட் கொடுக்கும்.