கோடை காலத்தில் வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்பதால் ஏதாவது ஜில்லுன்னு குடிச்சா நல்லாயிருக்கும் என தோன்றும். உடலின் வெப்பநிலையை சமநிலையில் வைக்க குளிர்ச்சியான உணவுகளை சாப்பிட வேண்டும் என பரிந்துரைப்பார்கள். கோடை காலத்தில் கிடைக்கும் காய்கள், பழங்கள் ஆகியவற்றை சாப்பிட வேண்டும். உங்களுக்கு மாம்பழம் பிடிக்கும் என்றால் நிச்சயம் இதை முயற்சி செய்யலாம்.
இளநீர், மாம்பழம் இருந்தாலே போதும். சூப்பரான சம்மர் டிரிங் தயார்.
இளநீர், மாம்பழம் ஷேக்
என்னென்ன தேவை?
இளநீர் - 2
மாம்பழம் - 2
ஏலக்காய் பொடி- ஒரு டீஸ்பூன்
செய்முறை:
இளநீரில் கிடைக்கும் தேங்காய், தண்ணீர் இரண்டையும் எடுத்துக்கொள்ளவும். இதோடு தோல் நீக்கிய நன்கு பழுத்த மாம்பழத்தை துண்டுகளாக்கி மிக்ஸி ஜாரில் போட்டு அரைக்கவும். இளநீர் தேங்காய், தண்ணீர், மாம்பழம் ஏலக்காய் பொடி சேர்த்து அரைத்தால் திக்கான ஷேக் த்யார். இனிப்பு தேவையெனில் கன்டன்ஸ் மில்க், தேன் ஏதாவதை ஒன்றை சேர்க்கலாம். இதை ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து குடித்தால் கோடைக்கு நன்றாக இருக்கும்.
இதே செய்முறையில் மாம்பழத்துடன் நுங்கு சேர்த்து மில்க்ஷேக் செய்து குடிக்கலாம். ருசியாகவும் இருக்கும் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியதாகவும் இருக்கும்.
இளநீரில் அதிகளவு எலக்ட்ரோலைட்கள் நிறைந்துள்ளது. வெயிலை சமாளிக்க அல்லது தாகம் எடுக்கும்போது, சோடா அல்லது செயற்கையான குளிர்பானங்களை சாப்பிடுவது நல்லதல்ல. அவற்றில் கலோரி அதிகம். அதோடு சர்க்கரை அளவு மிகவும் அதிகம். ஆனால், இளநீர் குறைந்த கலோரி கொண்டது. இதில் சராசரியாக, 8-அவுன்ஸ் (240-மில்லி லிட்டர்)-; சுமார் 45-60 கலோரி இருக்கிறது. இது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
இளநீரில் பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம் மற்றும் வைட்டமின் சி போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவை உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு முக்கியம் மற்றும் வளர்சிதை மாற்றம், ஆற்றல் உற்பத்திக்கு உதவும்.
மாம்பழம் நார்ச்சத்து நிறைந்தது. கலோரியும் குறைவும். சத்துமிகுந்த மாம்பழம், இளநீர் கொண்டு ஜூஸ் செய்து குடிப்பது நல்லதுதான்.
மேலும் வாசிக்க..
Mango Benefits: உணவுக்கு பிறகு மாம்பழம் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டால் என்ன பலன்?