தேவையான பொருட்கள்


அவல் - ஒரு கப்


பெரிய வெங்காயம் - 1


மோர் - ஒன்றரை கப்


உப்பு - தேவையான அளவு


கொத்தமல்லித்தழை - சிறிதளவு


கறிவேப்பிலை சிறிதளவு


உளுந்து - ஒரு ஸ்பூன் 


கடலைப் பருப்பு - ஒரு ஸ்பூன்


இஞ்சி - ஒரு துண்டு


தேங்காய் துருவல் - அரை கப்


செய்முறை


ஒன்றரை கப் சிவப்பு அல்லது வெள்ளை அவலை நன்கு கழுவி ஒன்றரை கப் மோர் ஊத்தி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். 


ஒரு கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து, சிறிது கடுகு சேர்த்து பொரிந்ததும், ஒரு ஸ்பூன் உளுந்து, ஒரு ஸ்பூன் கடலை பருப்பு சேர்த்து பொன்னிறமாக வதங்கியதும், இதில் ஒரு நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து கண்ணாடிப்பதம் வரும் வரை வதக்கினால் போதுமானது. இதில் ஒரு துண்டு இஞ்சியை பொடி பொடியாக நறுக்கி சேர்த்துக்கொள்ளவும்.


பின் நறுக்கிய கறிவேப்பிலை , காரத்திற்கேற்ப பச்சை மிளகாய் நறுக்கி  சேர்த்துக்கொள்ள வேண்டும். இந்த வெங்காய கலவைக்கு தேவையான அளவு மட்டும் உப்பு சேர்த்து கிளறி விட்டு இறக்கி கொள்ள வேண்டும். 


இப்போது ஊறவைத்த அவலை எடுத்து கைகளால் லேசாக மசித்து விட வேண்டும். இதனுடன் சிறிது பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளை சேர்க்க வேண்டும். துருவிய தேங்காய் அரை கப், இந்த கொழுக்கட்டைக்கு தேவையான அளவு உப்பு சேர்த்து, தாளித்து வைத்துள்ள பொருட்களையும் சேர்த்து நன்றாக பிசைந்துக்கொள்ள வேண்டும். 


இந்த கலவையை உருண்டைகளாக பிடித்து இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதன் மீது இட்லி தட்டு வைத்து அதன் மீது பிடித்து வைத்துள்ள கொழுக்கட்டைகளை அடுக்கி மூடி போட்டு வேகவைக்க வேண்டும். மிதமான தீயில் 5 நிமிடம் வேகவைத்து எடுத்தால் போதுமானது.  இந்த கார கொழுக்கட்டையை கொத்தமல்லி சட்னி அல்லது கார சட்னியுடன் வைத்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். 


மேலும் படிக்க


Banana Poli: அடிபோலி! வாழைப்பத்தில் சூப்பர் சுவையில் போளி செய்வது எப்படி?


Weight loss Tips: படிக்கட்டுகளில் ஏறுவது, நடைபயிற்சி! இரண்டில் எது பெஸ்ட் - நிபுணர்கள் சொல்வதென்ன?