தேவையான பொருட்கள்
துவரம் பருப்பு - 100 கிராம்
பாசி பருப்பு - 150 கிராம்
பச்சை மிளகாய் - 3
பூண்டு - 10 பல்
தக்காளி - 3
வெங்காயம் - 2
நெய் - ஒரு ஸ்பூன்
கடுகு - ஒரு ஸ்பூன்
காய்ந்த மிளகாய் -2
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி - சிறிது
மஞ்சள் தூள் - ஒரு டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - சிறிதளவு
செய்முறை
10 நிமிடம் ஊறவைத்த 100 கிராம் துவரம் பருப்பை, குக்கரில் சேர்க்கவும், 10 நிமிடம் ஊற வைத்த 150 கிராம் பாசி பருப்பையும் குக்கரில் சேர்க்கவும். மேலும் இதனுடன் 3 நறுக்கிய தக்காளி, 2 நறுக்கிய பெரிய வெங்காயம், 4 கீறிய பச்சை மிளகாய், 10 பல் பூண்டு, ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து இரண்டு கப் அளவு தண்ணீர் விட்டு, இதை நன்றாக கலந்து விட்டு வழக்கம் போல் மூடி போட்டு வேக வைக்கவும்.
4 விசில் வந்ததும் இதை அடுப்பில் இருந்து இறக்கி பிரஷர் அடங்கியதும் மூடியயை திறந்து இதை கரண்டியால் லேசாக மசித்து விட்டாலே நன்றாக மசிந்து விடும். இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்ந்து கலந்து விடவும்.
அடுப்பில் ஒரு கடாய் வைத்து ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து உருகியதும், ஒரு ஸ்பூன் சீரகம், காய்ந்த மிளகாய் 2, கடுகு உளுத்தம் பருப்பு ஒரு ஸ்பூன், பெருங்காய தூள் சிறிதளவு சேர்க்கவும். கடுகு பொரிந்து காய்ந்த மிளகாய் சிவந்ததும் அடுப்பை அணைத்து விட வேண்டும். இப்போது இதில் சிறிது கறிவேப்பிலை சேர்த்து கலந்துவிட்டுக் கொள்ளவும்.
இதற்கிடையே நாம் தயார் செய்து வைத்துள்ள பருப்பில் சிறிது நறுக்கிய கொத்தமல்லி தழை சேர்த்து, இதனுடன் தாளிப்பையும் சேர்த்து கலந்து விடவும். அவ்வளவு தான் சுவையான பருப்பு மசியல் தயார். இது சப்பாத்தியுடன் வைத்து சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும்.
மேலும் படிக்க
Green Peas Rice : பிரியாணியை மிஞ்சும் சுவையில் பச்சை பட்டாணி சாதம்.. செய்முறை இதோ..
Banana Poli: அடிபோலி! வாழைப்பத்தில் சூப்பர் சுவையில் போளி செய்வது எப்படி?