ரொட்டியை பெரும்பாலானோர் விரும்பி சாம்பிடுவர். அப்படி விரும்பி சாப்பிடும் ரொட்டி ப்ரியர்கள் ஒரு வித்தியாசமான ரொட்டியை சாப்பிட விரும்பினால் நீங்கள் இந்த இலங்கை போல் ரொட்டியை சுவைக்கலாம். இது ஒரு சைவ உணவு. இதன் செய்முறை மிகவும் எளிமையானது.
இலங்கை போல் ரொட்டி தேங்காய் பச்சை மிளகாய் மற்றும் மசாலா கொண்டு தயாரிக்கப்படுகிறது. வழக்கமாக நாம் செய்யும் ரொட்டியை விட இது சற்று வித்தியாசமாக இருக்கும். மேலும் இந்த ரொட்டி நல்ல சுவை மிகுந்ததாக இருக்கும். இந்த ரொட்டியை சென்னா மசாலா, குருமா, பன்னீர் பட்டர் மசாலா போன்ற கிரேவியுடன் வைத்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். இந்த ரொட்டியை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவர். வாங்க இலங்கை போல் ரொட்டி எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
2 கப் மைதா, 2-3 பச்சை மிளகாய் நறுக்கியது, 1 கப் துருவிய தேங்காய், 1 வெங்காயம் நறுக்கியது, ஒரு கைப்பிடி கறிவேப்பிலை, உப்பு - சுவைக்கேற்ப, தண்ணீர்- தேவைக்கேற்ப, எண்ணெய் -தேவைக்கேற்ப.
செய்முறை
1. இலங்கை போல் ரொட்டி செய்ய ஒரு பாத்திரத்தில் தேங்காய் துருவல், பச்சை மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை மற்றும் உப்பு சேர்க்கவும். இந்த அனைத்து பொருட்களையும் நன்றாக கலந்து அதிகப்படியான தண்ணீரை பிழிந்து விடவும்.
2.இப்போது, மைதாவுடன் சிறிது தண்ணீர் சேர்த்து, மிருதுவான மாவு பதத்திற்கு பிசையவும். 5-10 நிமிடங்கள் இதை அப்படியே வைத்து விட வேண்டும்.
3.உங்கள் கைகளில் எண்ணெய் தடவிக் கொண்டு, மாவை ரொட்டி செய்வதற்கு தேவையான அளவில் உருண்டைகளாக பிரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். உருண்டைகளில் ஒன்றை எடுத்து உங்கள் விரல்களால் மெதுவாக தட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
4. ஒரு தவாவை குறைந்த மிதமான தீயில் சூடாக்கி அதன் மீது தட்டையான மாவை வைக்கவும். பொன்னிறமாகவும் மிருதுவாகவும் மாறும் வரை இரு பக்கங்களிலும் திருப்பி போட்டு வேகை வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் மேல் லேசாக நெய் தடவலாம்.
5. இதே முறையில் அனைத்து உருண்டைகளையும் தட்டி தவாவில் போட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான் இலங்கை போல் ரொட்டி தயார். இதை குருமா அல்லது சென்னா மசாலா உடன் வைத்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
மேலும் படிக்க
Droupadi Murmu: குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு இன்று சென்னை வருகை.. பலத்த போலீஸ் பாதுகாப்பு..!
Car Accident: கர்நாடகா அருகே சோகம்.. நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதல் .. 12 பேர் உயிரிழப்பு..