கேழ்வரகு ஒரு ஆரோக்கியமான உணவுப் பொருள். கேழ்வரகில் வைட்டமின் சி, வைட்டமின் ஈ, வைட்டமின் பி ஆகியவை உள்ளன. மேலும் இதில் இரும்புச் சத்து, கால்சியம், ஆக்ஸிஜனேற்றிகள், புரதங்கள், நார்ச்சத்துக்கள், போன்ற முக்கிய ஊட்டச் சத்துக்கள் நிறைந்துள்ளன. கேழ்வரகை உட்கொள்வது வளரும் குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கும், பெரியவர்களின் எலும்பு வலிமையை பராமரிக்கவும் உதவுவதாக கூறப்படுகிறது. கேழ்வரகில் இரும்புச் சத்து அதிகமாக உள்ளதால் இது இரத்த சோகையை போக்குவதில் முக்கிய பங்காற்றுவதாகவும் சொல்லப்படுகின்றது.
முளை விட்ட கேழ்வரகை காலையில் உட்கொள்வது கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களின் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளைத் தருவதாகவும், ராகியில் உள்ள அபரிமிதமான இரும்பு மற்றும் கால்சியம் காரணமாக, பால் உற்பத்தியைத் தூண்டப்படுவதாகவும் கூறப்படுகிறது. இப்படி பல்வேறு நன்மைகளை உள்ளடக்கிய கேழ்வரகை கொண்டு ராகி சீலா ரெசிபி எப்படி செய்வதென்று பார்க்கலாம் வாங்க.
தேவையான பொருட்கள்
1 கப் ராகி மாவு, 2 டீஸ்பூன் கடலை மாவு, 2 டீஸ்பூன் தயிர், 2 வெங்காயம் பொடியாக நறுக்கியது, 1 தக்காளி பொடியாக நறுக்கியது, 4 பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது, 1/2 கப் குடை மிளகாய், 1 டீஸ்பூன் நொறுக்கப்பட்ட முந்திரி (விரும்பினால்), 2 டீஸ்பூன் கொத்தமல்லி இலைகள், 2 டீஸ்பூன் மிளகாய் தூள், 1 தேக்கரண்டி இஞ்சி, சீலாக்களை வறுக்க நெய் அல்லது எண்ணெய்.