மக்கானா ஊட்டச்சத்து மிகுந்த ஒன்று. ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும் என்று தோன்றும்போது இதில் இனிப்பு, கார வகை உணவுகளை செய்து சாப்பிடலாம். குழந்தைகளுக்கு பாலுடன் சேர்த்து கொடுக்கலாம். இப்படி, மக்கானா ஸ்பைசி ஸ்நாக் எப்படி செயவது என காணலாம்.






தாமரை விதை/ மக்கானா சாதாரணமாக சாப்பிடுவது சிறந்தது. இருப்பினும், சுவையாக வேண்டும் என்றால் வீட்டிலேயே வறுத்து சாப்பிடலாம். பாக்கெட்களில் அடைக்கப்பட்டு சுவையூட்டப்பட்ட தாமரை விதையில் உப்பு, ஆரோக்கியமற்ற கொழுப்புகள் மற்றும் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் பிற கலவைகள் இருப்பதாக சொல்லப்படுக்கிறது. எனவே, அவற்றை வீட்டில் செய்வது சிறந்தது. ஆலிவ் எண்ணெய் அல்லது நெய்யில் வறுத்து, சிறிது சீரக தூள், மிளகாய் தூள் போன்றவற்றைச் சேர்த்து சாப்பிடலாம்.


மில்க் ஷேக்குகளில் மக்கானா சேர்த்து சாப்பிடலாம்.  ஊட்டச்சத்து நிறைந்த பானத்தை தயாரிக்க, நீங்கள் செய்ய வேண்டியது உலர்ந்த வறுத்த தாமரை விதையை பால், நட்ஸ், சியா சீட்ஸ், இதோடு ஓட்ஸ் அல்லது ஆப்பிள், வாழைப்பழம் போன்ற பழங்களை சேர்க்கலாம். மில்க் ஷேக்கை கொஞ்சம் இனிப்பாக்க சிறிது இயற்கைத் தேன், வெல்லம் அல்லது பேரீச்சம்பழம் பயன்படுத்தலாம். ஆனால் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை சேர்க்க வேண்டாம்.


ஸ்பைசி கார்லிக் மக்கானா


என்னென்ன தேவை?


மக்கானா - 200 கிராம்


பூண்டு - 10-15 பல்


மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்


சீரக தூள் - 1 டீஸ்பூன்


கருவேப்பிலை - சிறிதளவு


உப்பு - தேவையான அளவு


நெய் - 1 டேபிள் ஸ்பூன்


செய்முறை:


இந்த ஸ்நாக் செய்வது எளிதானது. பூண்டை தோல் உரித்து வைக்கவும். மிக்ஸி ஜாரில் பூண்டு, மிளகாய் தூள், சீரக தூள், உப்பு ஆகியவற்றை அரைக்கவும். 


இப்போது அடிப்பில் மிதமான தீயில்  கடாயை வைத்து நெய் சேர்க்கவும். இதில் அரைத்த பூண்டு விழுதை சேர்த்து கலக்கவும். கருவேப்பிலை சேர்க்கவும். சிறிது நேரம் வதங்கியதும், மக்கானாவை சேர்த்து நன்றாக கலக்கவும். சுட சுட காரமான மக்கானா தயார்.