தீபாவளி பண்டிகையை ஆரோக்கியமான இனிப்பு வகைகளுடன் கொண்டாட வேண்டும் என்பவர்களுக்கு சில உணவு வகைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. 


ரவா லட்டு, பயத்த மாவு லட்டு, அதிரசம், முறுக்கு உள்ளிட்டவைகள் தயாரிக்கும்போது அதில் மக்கானா வைத்தும் செய்யும் நட்ஸ் வகைகளை சேர்க்கலாம். இது புரதச்சத்து நிறைந்தது. எப்படி செய்வது என காணலாம்.


மக்கானா லட்டு:


என்னென்ன தேவை?


மக்கானா - 2 கப்


பாதாம் - 1/2 கப்


தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன்


பேரீட்ச்சை பழம் - 10 


ஏலக்காய் பொடி - சிறிதளவு


வறுத்த எள் - 2 லேபிள் ஸ்பூன்


க்ரேடட் நட்ஸ் - 2 டீ ஸ்பூன்


திராட்ச்சை - 3 டீஸ்பூன்


நெய் - 3 டேபிள் ஸ்பூன்


செய்முறை:


மக்கானா, பாதாம், பேரீச்சை பழம், தேங்காய் ஆகியவற்றை எண்ணெய் இல்லாமல் கடாயில் சேர்த்து நன்றாக வதக்கவும்.


மக்கானா, பாதாம் ஆறிய பிறகு மிக்ஸி ஜாரில் சேர்த்து மாவு போல அரைக்கவும். இதோடு, ஏல்லக்காய், பேரீச்சை பழம் சேர்க்கவும். இப்போது இந்த கலவையை ஒரு பாத்திரத்தில் சேர்க்கவும். 


அதில், துருவிய பாதாம், முந்திரி, பிஸ்தா மற்றும் திராட்ச்சை ஆகியவற்றை சேர்க்கவும். இப்போது உருக்கிய நெய் சிறிதளவு ஊற்றவும். கைகளில் நெய் தடவி லட்டுக்களாக பிடிக்கவும். சுவையான ஆரோக்கியமான மக்கானா லட்டு தயார்.






தேங்காய் லட்டு:


தேங்காய் துருவி அதில் லட்டும் செய்யலாம்.  துருவிய தேங்காய், கன்டன்ஸ்டு மில்க், ஏலக்காய் பொடி இதை அனைத்தையும் கலந்து சிறிதளவு நெய் சேர்த்து சிறிய உருண்டைகளாக பிடிக்கவு. இதில் வறுத்த முந்திரியும் சேர்த்துக்கொள்ளலாம். 


கேரட் அல்வா:


தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் கேரட் இனிப்பு வகைகள் வீட்டிலேயே செய்வதுண்டு. துருவிய கேரட், சர்க்கரை, நெய், ஏலக்காய் பொடி சேர்த்து செய்தால் கேரட் அல்வா தயார்.


ரவா லட்டு செய்முறை


என்னென்ன தேவை?


 ரவா - 1/2 கிலோ


சர்க்கரை - 1 1/2 கப்


நெய் - ஒரு பெரிய கப்


முந்திரி - ஒரு கப்


ஏலக்காய் தூள் - சிறிதளவு


செய்முறை


பாதம், கருப்பு திராட்ச்சை என எதுவாக இருப்பினும் உங்கள் விருப்பத்திற்கேற்ப சேர்த்து கொள்ளலாம். ஒரு கடாயில் மிதமான தீயில் நெய் சேர்த்து முந்திரி, உலர்ந்த பழங்களை பொன்னிறமாக வறுத்து தனியே வைக்கவும். அதே கடாயில், சிறிதளவு நெய் சேர்த்து ரவையை 2 அல்லது 3 நிமிடம் வறுக்க வேண்டும். நிறம் மாறாமல் ரவையை வறுக்க வேண்டும். அப்போதான் லட்டு  சுவையாக இருக்கும். ரவையை வறுத்து தனியே வைக்கவும்.


இனிப்பு சுவைக்காக, சர்க்கரையை மிக்சியில் பொடியாக அரைத்து வைக்க வேண்டும். இல்லையெனில் சர்க்கரையை சிறிதளவு தண்ணீர் சேர்த்து கம்பி பதத்தில் சர்க்கரை பாகு காய்ச்சியும் செய்யலாம்.


ஒரு  பாத்திரத்தில் வறுத்த ரவை, முந்திரி சிறிதளவு உருக்கிய நெய் சேர்த்து லட்டு போல பிடிக்கவும். இதில் சிறிதளவு பால் சேர்த்து கலவை சூடாக இருக்கும்போதே சிறிய லட்டுகளாக பிடிக்கவும். இப்போது சுவையான ரவா லட்டு ரெடி. பால் சேர்த்தால் லட்டு வெகு நாட்களுக்கு இருக்காது. அதனால், உங்களுக்கு ஏற்றபடி இனிப்பு வகைகளை தயார் செய்யவும். ஆரோக்கியமான இனிப்பு செய்து மகிழ்ச்சியாக தீபாவளியை கொண்டாடலாம்.