தேவையான பொருட்கள்
பச்சரிசி- 1 கப்
புளித்த தயிர் - 1 கப்
ரவை - அரை கப்
எண்ணெய் - தேவையான அளவு
பச்சைமிளகாய் -1
இஞ்சி - 1 துண்டு
சீரகம் - 1 ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
கொத்தமல்லித்தழை - 1 கைப்பிடி
செய்முறை
ஒரு கப் பச்சரிசியை கழுவி அதை தண்ணீரில் ஊற வைக்கவும். அரை மணி நேரத்திற்கு பின் தண்ணீரை வடிகட்டி விட்டு அரிசியை மிக்ஸி ஜாரில் சேர்த்து, தண்ணீர் சேர்க்காமல், ஒரு கப் புளித்த தயிரை மட்டும் இதனுடன் சேர்த்து மைய அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதை ஒரு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ள வேண்டும். இப்போது அரிசியை அளந்த அதே கப்பில் அரை கப் அளவு ரவை எடுத்து அரிசி மாவுடன் சேர்த்து விட வேண்டும். இதை கட்டி இல்லாமல் நன்கு கலந்து விட வேண்டும்.
இப்போது அடுப்பில் ஒரு பான் வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்க்கவும், சூடானதும், ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு டீஸ்பூன் கடுகு சேர்க்கவும், பொரிந்ததும், பொடியாக நறுக்கிய இன்ஞ்சி, ஒரு டேபிஸ் ஸ்பூன் அளவு சேர்க்கவும், நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து பச்சை வாசம் போகு வரை வதக்கவும்.
இதனுடன் ஒரு கைப்பிடி அளவு நறுக்கிய கொத்தமல்லி தழையை சேர்த்து இறக்கி இதை மாவுடன் சேர்க்கவும். மாவில் தேவையான அளவு உப்பு சேர்க்கவும். இதை நன்றாக கலந்து விட்டு, மாவை நான்கு மணி நேரம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும். உடனே சமைக்க வேண்டும் என்றால் கால் ஸ்பூன் சோடா உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட்டு சமைக்கலாம்.
இப்போது நான்ஸ்டிக் பேனில் வைக்கும் அளவுள்ள ஒரு அகலமான தட்டை எடுத்துக் கொள்ள வேண்டும். தட்டு முழுவதும் உள்பகுதியில் எண்ணெய் தேய்த்துக் கொள்ள வேண்டும். இப்போது தயாரித்து வைத்துள்ள மாவை தட்டில் ஊற்றிக் கொள்ள வேண்டும். குறைந்தது அரை இஞ்ச் அளவு இருக்குமாறு ஊற்றிக் கொள்ள வேண்டும்.
இப்போது நான்ஸ்டிக் போனில் தண்ணீர் ஊற்றி அதன் மீது ஸ்டாண்டு வைத்து அதன் மீது தட்டு வைத்து மூடி போட்டு 10 நிமிடம் வேக வைக்க வேண்டும். பின் இதை இறக்கி 3 நிமிடம் ஆற வைத்து பின் நமக்கு வேண்டிய ஷேப்பில் ஆற வைத்து எடுத்துக் கொள்ளலாம். இது மிக சுவையான காலை உணவாக இருக்கும். இதை கார சட்னியுடன் வைத்து சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும்.
மேலும் படிக்க
Sweet Potato Halwa: நார்ச்சத்து மிக்க சர்க்கரை வள்ளிக்கிழங்கில் தித்திப்பான அல்வா செய்து அசத்துங்க!