தேவையான பொருட்கள்



பூசணிக்காய் -1/4 கிலோ 
உருளைக்கிழங்கு - 1
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
அரிசி மாவு - 2 ஸ்பூன் 
சோளமாவு-2 ஸ்பூன் 
கறிமசாலாத் தூள் - 1 ஸ்பூன் 
மிளகுத்தூள் - 1 ஸ்பூன் 
லெமன் ஜூஸ்-1 ஸ்பூன் 
பிரெட் க்ரம்ஸ் - தேவையான அளவு 
உப்பு - தேவையான அளவு 
எண்ணெய் - தேவையான அளவு



செய்முறை



பூசணிக்காயை துருவிக் கொள்ளவும். உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து வைத்துக் கொள்ள வேண்டும்.இதற்கிடையே வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை மிகப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். 



இப்போது துருவிய பூசணிக்காயில் சிறிது தண்ணீர் தெளித்து, சுமார் 10 நிமிடங்கள் வரை இட்லி தட்டில்  வைத்து, இட்லியை வேக வைத்து எடுப்பதை போல் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

 

இதை ஆற வைத்து ஒரு கிண்ணத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.  பின் அதே கிண்ணத்தில் மசித்து வைத்துள்ள உருளைக் கிழங்கு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். 

பின் அதில் அரிசி மாவு, சோள மாவு, கறி மசாலா தூள், மிளகு தூள், லெமன் ஜூஸ் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக பிசைந்துக் கொள்ள வேண்டும். இந்த கலவையை கட்லெட் வடிவில் தட்டிக் கொள்ள வேண்டும்.

 

ஒரு தட்டில் பிரட் க்ரம்ஸ் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். கட்லெட் துண்டுகளை இந்த ப்ரெட் க்ரம்ஸ் மீது பிரட்டி எடுத்து சுமார் 20 நிமிடங்கள் வரை அப்படியே வைத்து விட வேண்டும்.

அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் சேர்த்து, எண்ணெய் சூடானதும்  அதில் கட்லெட்களை சேர்த்து 2 பக்கமும் பொன்னிறமாக வெந்ததும் எடுத்து விடலாம். அவ்வளவுதான் டேஸ்டியான பூசணிக்காய் கட்லெட் தயார். 

 

பூசணிக்காயின் நன்மைகள்



பூசணிக்காய்யை நம் உணவில் தினமும் சேர்த்து வந்தால், வயிற்றிலுள்ள நாடாப்புழுக்களை அழித்து, மூலப் பிரச்சனைகளுக்கு பூசணிக்காய் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.


பூசணிக்காய்  நம் உடம்பில் உள்ள எலும்புகள் பலவீனமாவதை தடுக்கும் என கூறப்படுகிறது.  பூசணிக்காயில் இருக்கும் நார்ச்சத்து, மலச்சிக்கல் ஏற்படுவதை தடுக்கிறது. மேலும் ஜீரண உறுப்புகளுக்கு பலத்தை அதிகப்படுத்த உதவுகிறது. 


பூசணியில் பொட்டாசியம் சத்து நிறைந்து இருப்பதால், நமது உடம்பின் அதிக ரத்த அழுத்தத்தை தடுக்கலாம். 


மேலும் படிக்க 


Tender Coconut Drink :இளநீரில் ஜில்லென்று ஒரு பானம்.. ஒரு முறை சுவைத்தால் மீண்டும் மீண்டும் கேட்க தோணும்!


Instant Poha Idly: மாவு இல்லையா? இன்ஸ்டண்ட் அவல் இட்லியும், சூப்பர் சட்னியும் இப்படி செய்து அசத்துங்க!