சிலருக்கு எப்படி செய்தாலும் ஆப்பம் சரியாகவே வராது.  கீழ் கூறியுள்ள பக்குவத்தில் மாவு அரைத்து ஆப்பம் சுட்டால், ஆப்பம் பஞ்சு போன்று மெது மெதுவென கிடைக்கும். மேலும் இதை மிக எளிமையாக செய்து விட முடியும். இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவர். வாங்க சுவையான ஆப்பம் எப்படி செய்வது என்று பார்க்கலாம். 


தேவையான பொருட்கள் 


இட்லி அரிசி - 1 டம்ளர், பச்சரிசி -1 டம்ளர், உளுந்து - 1/4 கப், தேங்காய் துருவல் - 2 டேபிள் ஸ்பூன், அவல் - 1/4 கப், நைலான் ஜவ்வரிசி - 1ஸ்பூன், உப்பு - 1ஸ்பூன், சர்க்கரை -1/2 ஸ்பூன்.


செய்முறை 


அரிசி, உளுந்து இரண்டையும் ஒன்றாக சேர்த்து தண்ணீர் ஊற்றி கழுவி மூன்று மணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும்.


அவலையும்  ஒரு கிண்ணத்தில் சேர்த்து ஒரு முறை தண்ணீர் ஊற்றி அலசி விட்டு  குறைந்தது  ஒரு மணி நேரம் ஊற வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.


 ஊற வைத்த அரிசி உளுந்து இரண்டையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.


அதன் பிறகு அவலுடன் தேங்காய் துருவலை சேர்த்து அரைத்து மாவுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். 


பின் ஜவ்வரிசியையும், தேவையான அளவு உப்பும் சேர்த்து மாவை கரைத்து வைத்து விட வேண்டும். இது எட்டு மணி நேரம் வரை அப்படியே இருந்தால் தான் மாவு நன்றாக புளித்து வரும்.


ஆப்பம் சுடுவதற்கு முன் சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்கி கொள்ள வேண்டும். தோசை மாவு பதத்தை விட ஆப்பத்திற்கு மாவு சிறிது தண்ணீராக இருக்க வேண்டும்.


ஆப்ப ஊற்ற நான் ஸ்டிக் கடாயாக இருந்தால் அப்படியே ஊற்றிக் கொள்ளலாம். ஒரு வேளை இரும்பு கடாயாக இருந்தால் அதை முன்னமே எண்ணெய் தேய்த்து வைத்துப் பிறகு அடுப்பில் வைத்து ஆப்பம் ஊற்றினால் ஆப்பம் ஒட்டாமல் வரும்.


இந்த அப்பம் பஞ்சு போல் சாஃப்ட்டாக இருக்கும். இதனுடன் தேங்காய் பால் வைத்து சாப்பிட்டால் சுவை வேற லெவலில் இருக்கும். 


மேலும் படிக்க 


Carrot Sago Payasam: கேரட் ஜவ்வரிசி பாயாசம்! இப்படி செய்தால் சுவை அசத்தலாக இருக்கும்!


Bread Chilli:காரசாரமான சில்லி பிரெட்... இப்படி செய்தால் சுவை வேற லெவலில் இருக்கும்..


Raddish Pachadi: முள்ளங்கி பச்சடி! இப்படி செய்தால் கூட ஒரு கரண்டி எக்ஸ்ட்ரா வாங்கி சாப்டுவீங்க!