சமைக்க போதுமான நேரமில்லயா? அப்போதை இதை செஞ்சு நல்லாவே சாப்பிடுங்க!

நீங்கள் பசியுடன் இருக்கும்போது செய்து சாப்பிட சுவையான, எளிமையான மற்றும் ஆரோக்கியமான உடனடி சமையல்களுக்கான ஐடியாக்களை நாங்கள் இங்கே பட்டியலிட்டுள்ளோம். 

Continues below advertisement

சோம்பலான நாட்களில் நீங்கள் பசியுடன் இருக்கும்போது செய்து சாப்பிட சுவையான, எளிமையான மற்றும் ஆரோக்கியமான உடனடி சமையல்களுக்கான ஐடியாக்களை நாங்கள் இங்கே பட்டியலிட்டுள்ளோம். 

Continues below advertisement

1.உப்புமா

இலகுவான மற்றும் சத்தான உணவை அதிகமாக உட்கொள்ள நீங்கள் விரும்பும் நாட்களில் இது ஒரு சரியான மதிய உணவு விருப்பமாகும். இந்த சுவையான தென்னிந்திய உணவு உளுத்தம் பருப்பு, ரவை மற்றும் காய்கறிகளுடன் சில மசாலா மற்றும் தயிர் சேர்த்து தயாரிக்கப்படுகிறது. தயாரித்து முடித்ததும் மேலே சிறிது எலுமிச்சை சாறு பிழிந்து கொத்துமல்லியைத் தூவ மறக்காதீர்கள். இதை தயார் செய்ய உங்களுக்கு இருபது நிமிடங்கள் போதும்.


2. மசாலா வெஜிடபிள் கிச்டி 

இந்த எளிமையான உணவை உலகளாவிய கஃம்பர்ட் புட் என்று அழைப்பது மிகவும் பொருந்தும். மதிய உணவை சமைக்க உங்களுக்கு உத்வேகம் இல்லாத போது, ​​இந்த ஒன் பாட் டிஷ் மிகவும் ஏற்றது. ஒரு பிரஷர் குக்கரை எடுத்து, அனைத்து பொருட்களையும் ஒவ்வொன்றாக சேர்க்கவும். ஐந்து விசில் வரை வேக விடவும், உங்கள் கிச்சடி தயார்.

3. பார்லி தாலியா 

இது ஒரு ஆரோக்கியமான உணவு, இதைச் சமைக்க வெறும் பத்து நிமிடங்கள் ஆகும். இந்த உணவு கடுகு, சீரகம், பூண்டு, கறிவேப்பிலை மற்றும் கொண்டைக்கடலை ஆகியவற்றை சரியான பங்கிலான காய்கறி  மற்றும் பார்லியுடன் சேர்த்து தயாரிக்கப்படுகிறது. இந்த டூ மினிட்ஸ் உணவை வீட்டிலேயே செய்து சாப்பிடலாம்.

 4. பாலக் சூப் அல்லது கீரை சூப்

 எல்லோருக்கும் கீரை பிடிப்பதில்லை என்றாலும் அதனை உட்கொள்ள சில சுவாரஸ்யமான வழிகள் உண்டு. சில நேரங்களில், அதனை கூட்டாகச் சமைப்பது பெரிய வேலையாகச் சிலருக்குத் தோன்றலாம். ஆனால் அதனை சூப் வடிவில் செய்து சாப்பிடுவது கூடுதல் சுவை தரும். இந்த அட்டகாசமான தயாரிப்பை நீங்கள் விரும்புவீர்கள் என்பதில் துளியும் சந்தேகமில்லை. கூடவே அதற்கான டாப் அப்பாக கொஞ்சம் க்ரீம் சேர்க்கவும்.உங்களுக்குப் பிடித்த சூப் தயார்!

5. ஆலு போஹா 

மஹாராஷ்டிராவில் தட்டை அவல் கொண்டு தயாரிக்கப்படும் இந்த உணவு அவர்களின் வாழ்க்கை முறையில் தவிர்க்க முடியாத உணவுகளில் ஒன்று. வெறுமனே, காலை உணவாக ருசிக்கப்படும் போஹா, நீங்கள் பசியுடன் இருக்கும்போது எதையேனும் லேசாகக் கொரிக்கத் தோன்றினால் அதற்கு உதவுகிறது. வேகவைத்த உருளைக்கிழங்கு, வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து போஹா செய்து கூடவே வறுத்த வேர்க்கடலை சேர்த்து சாப்பிட்டால் அதுதான் தேவாமிர்தம்! 

Continues below advertisement
Sponsored Links by Taboola