உருளைக்கிழங்கு யாருத்தான் பிடிக்காது. உருளையில் புதிய டிஷ் எப்படி செய்வது என பார்க்கலாம். புதினா உருளை செமி க்ரேவி.


தேவையான பொருட்கள்


வேகவைத்த உருளைக்கிழங்கு - 5 


புதினா இலைகள் நறுக்கியது - ஒரு கப் 


பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 கப்


தக்காளி விழுது - ஒரு கப்


பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது - 3


இஞ்சி பூண்டு விழுது - ஒரு ஸ்பூன்


தாளிக்க


சீரகம் - ஒரு ஸ்பூன்


கடுகு - ஒரு ஸ்பூன்


மஞ்சள் தூள் = ஒரு ஸ்பூன்


கரம் மசாலா - ஒரு ஸ்பூன்


கொத்தமல்லி தூள் - ஒரு ஸ்பூன்


உப்பு - தேவையான அளவு


செய்முறை:


அடுப்பில் மிதமான தீயில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், மஞ்சள் தூள், பச்சை மிளகாய் எல்லாம் சேர்க்க வேண்டும்.


பின்னர், வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். வெங்காயம் பொன் நிறமாக மாறியதும் அரைத்த தக்காளி விழுதை சேர்க்கவும். இதோடு, கரம் மசாலா தேவையெனில் மிளகாய் தூள் கொஞ்சம் சேர்க்க வேண்டும்.


எல்லாம் நன்றாக வதங்கியதும் வேகவைத்த உருளை கிழங்கை சேர்த்து கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். பின்னர், புதினா இலைகள் சேர்த்து 2 நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கினால், ருசியான புதினா உருளை மசாலா ரெடி.