சில உணவுகளில் உள்ள சில தன்மைகள் காரணமாக அவற்றின் விளைவுகள் நம் தோலில் முதுமையான தோற்றத்தை ஏற்படுத்த வாய்ப்புகள் உண்டு. யாரும் வயதானது போல தோன்ற விரும்புவதில்லை. ஆக்ஸிஜனேற்ற அழுத்தம், தோல் வீக்கம் ஆகியவை இந்த விளைவை ஏற்படுத்தும் பிரச்சனைகள் ஆகும். இந்த விளைவுகள் மரபியல் மற்றும் வாழ்கை முறை மூலம் மாறுபடலாம்.


ஆனால் பெரும்பாலான மக்களுக்கு அவை இந்த பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த உணவுகளை முழுதாகவும் தவிர்த்து விட முடியாது. நம் உடலுக்கு நடுநிலையாக எல்லா ஊட்டச்சத்தும் கிடைக்க வேண்டும். அதனால் இவற்றை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொள்ளலாமே தவிர ஒரே அடியாக விட்டுவிட வேண்டாம். 


சர்க்கரை


அதிகப்படியான சர்க்கரை நுகர்வு AGEs எனப்படும் தீங்கு விளைவிக்கும் சேர்மங்களை உருவாக்குவதற்கு வழிவகுக்கும். இது ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை உருவாக்குவதுடன், திசுக்களை சேதப் படுத்துகிறது.



குளிர் பானங்கள்


அதிக சர்க்கரை உள்ளடக்கம் கொண்ட சோடாக்கள் மற்றும் எனர்ஜி பானங்கள் ஆகியவை உடலுக்கு தீங்கு விளைவிக்கும். இவை எடை அதிகரிப்பு மற்றும் கிளைகேஷனுக்கு வழிவகுக்கும். இதனால் முதுமை தொடர்பான விளைவுகள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.


தொடர்புடைய செய்திகள்: IND vs IRE 1ST T20: ஆடாம ஜெயிச்சோமடா..! அயர்லாந்தை வீழ்த்திய இந்தியா.. 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி


சீஸ் 


சீசில் நிறைய கொழுப்புகள் மற்றும் சோடியம் இருக்கும். அவை தோல் வீக்கத்தை ஏற்படுத்தும். மேலும் இருதய பிரச்சினைகளுக்கு காரணமாகவும் அமையலாம். வயதான தோற்றம் தொடர்பான பிரச்சனைகளை இவை வேகப்படுத்தும் என்பதால் குறைவாக சேர்த்துக்கொள்வது நல்லது.



பேக் செய்யப்பட உணவுகள்


பேக் செய்யப்படும் கேக், பிஸ்கட், பிரெட், பப்ஸ், போன்ற உணவுகளில் சுத்திகரிக்கப்பட்ட மாவுகள் சேர்க்கப்படுகின்றன. அவற்றில் சர்க்கரை மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்புகள் அதிகம். இவை உடலில் தோல் வீக்கம் ஏற்படுத்துவதோடு, எடை அதிகரிப்பை ஊக்குவிக்கிறது. இதனால் விரைவில் வயதான தோற்றம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.


சாஸ்கள்


ஆரோக்கியமற்ற கொழுப்புகள், சர்க்கரைகள் மற்றும் பல விஷயங்கள் சேர்க்கப்பட்டு உள்ள சில சாஸ்கள் பலருக்கும் விருப்பமானதாக இருக்கலாம். உணவுக்கு சுவை சேர்க்கும் அவை பல வகையில் உடலுக்கு தீங்கு விளைவிப்பவை ஆகும். தோல் வீக்கத்தை ஏற்படுத்தும் இது, ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை அதிகரிக்கும். இது வயதான தோற்றத்தை உருவாக்கும் செயல்முறையை தூண்டுகிறது.


ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும், வயதான தோற்றத்தை உடல் வெளிக்காட்டும் செயல்முறையை மெதுவாக்குவதற்கும் உணவு குறித்த கவனம் அவசியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். தேர்ந்தெடுத்து தக்க சமயங்களில் உண்ணுங்கள்.


பொறுப்புத்துறப்பு : இந்த உள்ளடக்கம் பொதுவான தகவல்களை உள்ளடக்கியது. இது மருத்துவ ரீதியான அறிவுரையோ, கருத்தோ அல்ல. தனிப்பட்ட உடல்நலம் சார்ந்த தகவல்களுக்கு மருத்துவரை அணுகுவது மட்டுமே சரியான தீர்வாகும். ஏபிபி பொதுத் தகவல்களுக்கான பொறுப்பை ஏற்காது.