ஹார்மோன்கள், மரபியல், மன அழுத்தம் மற்றும் தொடர்புடைய உடல்நலப் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் முகப்பரு ஏற்படுகிறது. அழுக்கு, மாசு மற்றும் பல்வேறு மேற்பூச்சு காரணங்களால் சாதாரண முகப்பரு தூண்டப்படலாம் என்றாலும், "பெண்களில் ஈஸ்ட்ரோஜன் அளவு குறையும் போது மற்றும் ஆண்களில் டெஸ்டோஸ்டிரோன் மற்றும் டைஹைட்ரோடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கும் போது முகப்பரு ஏற்படுகிறது என்று கூறப்படுகிறது. ஹார்மோனின் மாற்றம் அதிகப்படியான எண்ணெய் உருவாவதைத் தூண்டுகிறது, மேலும் துளைகளை அடைத்து, முகத்தில் சிவப்பு புள்ளிகள் ஏற்பட வழிவகுக்கிறது. முகப்பருவை தடுக்க ஊட்டச்சத்து நிபுணர்கள் சில பானங்களை பரிந்துரைக்கின்றனர். அவை என்ன என்பது குறித்துப் பார்க்கலாம்.
முகப்பரு பிரசானையை தீர்க்க பரிந்துரைக்கப்படும் பானங்களில் கொலாஜன் மற்றும் வைட்டமின் ஏ நிறைந்துள்ளன. இது தெளிவான சருமத்தை பெற உதவுகிறது. கறிவேப்பிலை, கொத்தமல்லி விதை, ரோஜா இதழ் ஆகியவற்றைக் கொண்டு முகப்பருவை சரி செய்வதற்கான பானத்தை தயாரிக்கலாம்.
கொத்தமல்லி விதைகளின் நன்மைகள்:
கொத்தமல்லி விதைகளில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அவை சருமத்தில் உள்ள கோடுகள் மற்றும் கருமை நிறத்தை குறைக்க உதவுகின்றன. இது இறந்த சரும செல்களை நீக்கி, நீரேற்றமாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்கும் என சொல்லப்படுகிறது.
ரோஜா இதழ்களின் நன்மைகள்:
ரோஜா இதழ்கள் சருமத்தின் ஆரோக்கியத்திற்கு நல்லது என கூறப்படுகின்றது. இதில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி ஆகியவை நிறைந்துள்ளன. இவை மனித உடலில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க உதவுகின்றன. மேலும் உங்கள் சருமம் மிருதுவாகவும், உறுதியாகவும், முகப்பரு இல்லாமல் இருக்கவும் உதவுகிறது.
கறிவேப்பிலை:
கறிவேப்பிலையில் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் மற்றும் வைட்டமின்கள் ஏ மற்றும் சி போன்றவை நிறைந்துள்ளன. இந்த பொருட்கள் அனைத்தும் ஒன்றிணைந்து சரும சுருக்கங்களைத் தடுக்கவும், கருவளையங்கள் மற்றும் முதுமையின் பிற அறிகுறிகளைக் குறைக்கவும், முகப்பரு இல்லாத சருமத்தை உருவாக்கவும் உதவுகின்றன.
முகப்பருவைத் தடுக்க பானம் தயாரிப்பது எப்படி:
நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், இந்த 3 பொருட்களையும் ஒன்றாக வேகவைத்து, அந்த தண்ணீரை வடிகட்டி குடிக்க வேண்டும். இதனை தினமும் குடித்தால் முகப்பரு இல்லாத சருமத்தைப் பெற முடியும். மேலும் சருமம் பொலிவாக இருக்கும்.
மேலும் படிக்க