தேவையான பொருட்கள்


நைலான் ஜவ்வரிசி - 100 கிராம்


பால் - அரை லிட்டர்


சர்க்கரை -100 கிராம்


கடல் பாசி - 3 டீஸ்பூன்


புட் கலர்


செய்முறை


100 கிராம் நைலான் ஜவ்வரிசியை 5 மணி நேரம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் மூன்று கப் தண்ணீர் சேர்த்து கொதி வந்ததும் ஜவ்வரிசியை சேர்த்துக் கொள்ளவும். மூன்று நிமிடங்களில் ஜவ்வரிசி வெந்து விடும். ரோஸ் புட் கலர் 3 சொட்டு சேர்த்துக் கொள்ளவும். உங்களுக்கு வேண்டிய நிறத்தில் புட் கலர் சேர்த்துக் கொள்ளலாம். ஜவ்வரிசி வெந்து கண்ணாடிப் பதம் வந்ததும் இதை வடித்துவிட வேண்டும். அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அரை லிட்டர் திக்கான பாலை சேர்க்கவும்.


பால் கொதித்ததும், தீயை குறைத்து  3 டீஸ்பூன் கடல் பாசியை சேர்த்துக்கொள்ளவும். கடல் பாசி அதிகமாகி விட்டால் புட்டிங் ரப்பர் மாதிரி ஆகி விடும். எனவே இதை சரியான பதத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.  100 கிராம் பொடித்த சர்க்கரை, அல்லது சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும். அல்லது நாட்டுச் சர்க்கரையும் சேர்த்துக் கொள்ளலாம்.  சர்க்கரை கரைந்ததும் வேக வைத்து வைத்துள்ள ஜவ்வரிசியை இதில் சேர்க்கவும். இதை இரண்டு நிமிடம் கொதிக்க விடவும். 


இந்த கலவையை ஒரு கண்ணாடி கிண்ணத்தில் ஊற்றிக் கொள்ளவும். இதன் உட்புறம் நெய் தடவி கொள்ளவும். அல்லது வீட்டில் இருக்கும் ஏதேனும் ஒரு பாத்திரத்தில் இதை ஊற்றி வைக்கலாம். இந்த கலவை ஆறிய உடன் மூடி போட்டு இதை இரண்டு மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து எடுக்கவும். ஃப்ரிட்ஜ் இல்லாதவர்கள் நான்கு மணி நேரம் வெளியில் வைத்தாலே செட் ஆகி விடும். இப்போது இதை வெளியே எடுத்து ஒரு கத்தியைக் கொண்டு ஓரங்களில் கீறி விட்டு ஒரு தட்டுக்கு மாற்றி உங்களுக்கு வேண்டிய வடிவங்களில் வெட்டி பறிமாறலாம்.


தட்டின் மீது அந்த பாத்திரத்தை கவிழ்த்து விட்டு பாத்தித்தின் மேல் பகுதியை லேசாக தட்டிக் கொடுத்தால் புட்டிங் அழகாக உடையாமல் தட்டில் விழுந்து விடும். இந்த புட்டிங் மிகவும் சாஃப்டாக நல்ல சுவையாக இருக்கும். 


மேலும் படிக்க 


Wheat Egg Pups: வீட்டிலே பேக்கரி ஸ்டைலில் முட்டை பப்ஸ் செய்யனுமா? இதோ பாருங்க


Potato Snack: உருளைக்கிழங்கில் மொறு மொறு ஸ்நாக் இப்படி செய்து அசத்துங்க!