ஒரு கிண்ணத்தில் ஒன்றரை கப் அளவு கோதுமை மாவு, இதனுடன் ஒரு ஸ்பூன் அல்லது தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும். இதனுடன் இரண்டு ஸ்பூன் அளவு வெண்ணெய் அல்லது நெய் சேர்த்துக் கொள்ளவும். இந்த மாவை சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து இந்த உருண்டை மீது எண்ணெய் தடவி மூடி போட்டு அப்படியே வைத்து விட வேண்டும். 


செய்முறை:


இப்போது அடுப்பில் கடாய் வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து சூடானதும் சிறிது கடுகு, நறுக்கிய ஒரு சிறிய சைஸ் வெங்காயம், சிறிது கறிவேப்பிலை, நீளவாக்கில் நறுக்கிய முட்டை கோஸ், ஒரு கப், நறுக்கிய இரண்டு பச்சை மிளகாய், அரை ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, நறுக்கிய ஒரு சிறிய சைஸ் குடை மிளகாய் சேர்த்து இதில் தேவையான அளவு உப்பு, கால் ஸ்பூன் மஞ்சள் தூள், அரை ஸ்பூன் தனி மிளகாய் தூள், அரை ஸ்பூன் மல்லி தூள், கால் ஸ்பூன் மிளகு தூள், கால் ஸ்பூன் கரம் மசாலா சேர்த்து நன்கு கலந்து விட வேண்டும்.


கடைசியாசி சிறிது நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி கிளறி விட்டு இந்த கலவையை இறக்கி கொள்ள வேண்டும். இதற்கிடையே  3 முட்டைகளையும் அவித்து பாதி பாதியாக வெட்டி வைத்துக் கொள்ளவும். இப்போது ஒரு கிண்ணத்தில் இரண்டு டேபிள் ஸ்பூன் சமையல் எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து நன்கு கலந்து விட்டுக் கொள்ளவும். இப்போது இந்த மாவை சப்பாத்திகளாக தட்டி வைத்துக் கொள்ளவும். 


தயார்:


இப்போது ஒரு திரட்டிய சப்பாத்தியை எடுத்து தட்டில் வைத்து இதன் மீது எண்ணெய் மற்றும் வெண்ணெய் கலந்து வைத்துள்ள கலவையை ஒரு பிரஷ் வைத்து தேய்த்து விட வேண்டும். இதன் மேல் மேலும் ஒரு சப்பாத்தி வைத்து இதன் மேலும் இந்த வெண்ணெய் கலவையை தேய்த்து விட வேண்டும். இதன் மேல் மேலும் ஒரு சப்பாத்தி வைத்து வெண்ணெய் தடவவும். இப்போது இதை திருப்பி போட வேண்டும். இப்போது அடிபாகத்தில் வெண்னெய் தடவில்லை இதன் மீது சிறிது கோதுமை மாவு தூவி சப்பாத்தி கட்டையால் சற்று அகலமாக தேய்த்து விட்டால் நமக்கு 3 லேயேர் கிடைத்து விடும். இதை சதுர வடிவில் தட்டி 9 துண்டுகளாக கத்தியால் வெட்டிக் கொள்ளவும்.


இப்போது வெட்டிய ஒரு சப்பாத்தி துண்டின் மீது சிறிது கலவை மற்றும் பாதி முட்டை வைத்து சமோசா போல் மடித்து பின் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து அதில் கால் கப் அளவு எண்ணெய் சேர்த்து 3  சமோசாவை வைத்து குக்கரை மூடி அடுப்பை மிதமான தீயில் வைத்துக்கொள்ளவும். பின் மூடியை திறந்து சமோசாவை திருப்பி விட்டு 4 நிமிடம் வேக வைத்து எடுத்தால் மொறு மொறுப்பான சுவையான சமோசா தயார்.