உணவில் அத்தனை சுவை இருந்தாலும் அதில் உப்பு இல்லையென்றால் அது ‘சப்’ என்றுதான் இருக்கும். உப்பு நம் உணவில் சுவை சேர்க்கும் பொருளாக அறியப்படுகிறது. இருந்தாலும் அதிகப்படியான அளவு உட்கொள்ளும்போது அது ஆரோக்கியமற்றதாகக் கருதப்படுகிறது. இருந்தாலும் ஒரு நபரின் உடல் உயிர்வாழ உப்பின் ஒரு அங்கமான சோடியம் தேவைப்படுகிறது. அப்படியென்றால், உப்பு நுகர்வு குறிப்பாக எப்போது பிரச்சனைகளை உருவாக்கத் தொடங்குகிறது? 


சிறிய அளவில் உட்கொள்ளும் போது, சோடியம் ஆனது நரம்புகள் மற்றும் தசைகள் சிறப்பாக செயல்பட உதவுவதோடு உடலில் உள்ள திரவத்தை சமநிலைப்படுத்துகிறது. ஆனால் அதன் உட்கொள்ளல் அதிகரிப்பதால், சோடியம் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். அதிகப்படியான உப்பு உட்கொள்வதால் உடலில் பல வகையான பக்க விளைவுகள் ஏற்படுகின்றன... 


உடல் வீக்கம்


சோடியம் தண்ணீரை ஈர்க்கும் என்று அறியப்படுகிறது. மேலும் ஒரு நபர் அதிக சோடியத்தை உட்கொள்ளும்போது அது அவரது அமைப்பில் அது அவர்களின் நீர் தக்கவைப்பை அதிகரிக்கிறது. உடலில் நீர் இருந்தால் என்ன பிரச்னை என யோசிக்கிறீர்களா? உடலில் தண்ணீரை தேக்கி வைத்திருப்பதால், ஒரு நபர் அவரது உடலில் வீக்கத்தின் அறிகுறிகளை வெளிப்படுத்த வாய்ப்புள்ளது. 


தாகம் அதிகரித்தல்


சோடியம் அதிகம் நீரை உறிஞ்சுவதால் அதிக தாகத்தை ஏற்படுத்தும் இயல்புடையதாகிறது. இதுகுறித்த தெளிவான உண்மையை அறிந்துகொள்வதற்கு இதுவரை போதுமான ஆராய்ச்சி செய்யப்படவில்லை என்றாலும், உப்பு நிறைந்த உணவுப் பொருட்களை சாப்பிடுவதால் ஒரு நபர் அதிக தண்ணீரைக் குடிப்பதை நாம் பொதுவாகவே காண்கிறோம்.


இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும்


உப்பு உங்கள் உடலில் தண்ணீரை இழுக்கிறது. ஒரு நபர் அதிகப்படியான சோடியத்தை உட்கொள்ளும்போது, அது இரத்த ஓட்டத்தில் நீரின் ஓட்டத்தை அதிகரிக்கிறது, இதனால் இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது.


தூக்கத்தின் தரம் மோசமடைகிறது


இரத்த அழுத்தம் அதிகரிப்பதன் விளைவாக, குடிப்பதற்கும் சிறுநீர் கழிப்பதற்கும் தூண்டுதல் அதிகரிக்கிறது. இதனால் ஒரு நபர் நல்ல தூக்கத்தைப் பெறுவது கடினமாகிறது. அதனால் குறிப்பாக மாலை வேளைகளில் உப்பு குறைவாக உட்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.


தலைவலி


2014 ஆம் ஆண்டு ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வின் மூலம், அதிக சோடியம் உட்கொள்வது ஒரு நபருக்கு தலைவலியைத் தூண்டும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலைவலி அடிக்கடி ஏற்படுகிறது. ஆனால் சாதாரண இரத்த அழுத்தம் உள்ளவர்கள் கூட உப்பு உட்கொள்ளலால் அடிக்கடி தலைவலி வருவதாக புகார் கூறுகின்றனர்.


எக்ஸிமா


உங்கள் தோல் வறண்டு, அரிப்பு மற்றும் வீக்கமாக காணப்படுகிறதா? உப்பு அதற்குக் காரணமாக இருக்கலாம். இது தொடர்பான அறிவியல் தரவு குறைவாக இருந்தாலும், அதிகப்படியான உப்பு ஒரு நபரின் நோய் எதிர்ப்பு சக்தியை பாதிப்பதாக நம்பப்படுகிறது.