இந்தியர்கள் பெருங்காயத்தை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்பவர்கள்.பெருங்காயத்தை உணவில் சேர்ப்பது உணவின் சுவையை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், நறுமணத்தையும் தருகிறது. அதன் நுகர்வு உங்கள் செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகிறது. ஆனால் அன்மைக் காலங்களில் பெருங்காயத்தில் கலப்படப் புகார்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. பெருங்காயத்தில் கலப்படம் செய்ய முடியுமா என்பது உங்களுக்கு ஆச்சரியமானதாக இருக்கலாம். ஆனால் அதில் கலப்படத்தைக் கண்டறிவது எளிதான காரியம் அல்ல. பல உணவு பரிசோதனை நிபுணர்களால் கூட போலியான பெருங்காயத்தை அடையாளம் காண முடிவதில்லை. அதனால் அதன் தூய்மையை வீட்டிலேயே கண்டறிய சில எளிய வழிவகைகளை நாம் இங்கே கொடுத்துள்ளோம்





மெழுகுவர்த்தியைப் பயன்படுத்தவும்: பெருங்காயத்தின் தூய்மையைச் சரிபார்க்க மெழுகுவர்த்தியைப் பயன்படுத்தலாம். இதற்கு துண்டு அளவு காயத்தை அல்லது அதன் பொடியை எடுத்து எரியும் மெழுகுவர்த்தியில் வைக்கவும். தூய பெருங்காயம் தீயில் பட்டவுடன் எரியத் தொடங்கும். மாறாக, போலியான பெருங்காயம் தீயில் வைத்தால் எரியாது.


அதன் நிறத்தைச் சரிபார்க்கவும்: தூய காயமானது வெளிர் பழுப்பு நிறத்தில் இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?  சூடான நெய்யில் போட்டால், அது பெரிதாகத் தொடங்கி, வெளிர் சிவப்பு நிறமாக மாறும். உங்கள் பெருங்காயத்தில் அத்தகைய மாற்றம் ஏற்படவில்லை என்றால், அதில் கலப்படம் இருப்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.


நறுமணத்தை உணருங்கள்: அசாஃபோடிடாவின் தூய்மையை அதன் வாசனையால் சரிபார்க்கலாம். பெருங்காயத்துக்கு என்று தனி நறுமணம் உண்டு. அதனை தொட்ட பிறகு கைகளை சோப்பினால் கழுவவும். உண்மையான காயத்தின் நறுமணம் சோப்பில் கழுவினாலும் கைகளில் இருந்து போகாது. ஆனால், போலி பெருங்காயத்தை தொட்டால், கைகளைக் கழுவியவுடன் அதன் வாசனை மறைந்துவிடும்.


விலையில் உள்ள வேறுபாடு: உண்மையான அல்லது போலியான காயத்தை கண்டறிவதற்கான சிறந்த வழி அவற்றின் விலை. உண்மையான அசாஃபோடிடா விலை உயர்ந்தது மற்றும் எல்லா இடங்களிலும் கிடைக்காது.


தண்ணீரில் கரைக்கவும்: காயத்தின் தரத்தை அடையாளம் காண மற்றொரு வழி, அது தண்ணீரில் கரைக்கப்படும் போது, அதன் நிறம் பால் வெள்ளை நிறமாக மாறும். நிறம் மாறவில்லை என்றால் அது போலியானது. நீங்கள் உண்மையான பெருங்காயத்தை சாப்பிட விரும்பினால், ஒரு கெட்டியான துண்டு பெருங்காயக் கட்டியை வாங்கி அதனை வீட்டிலேயே பொடியாக அரைக்க வேண்டும். தூள் செய்யப்பட்ட பெருங்காயத்தில் அதிக கலப்படம் இருப்பதாகக் கருதப்படுகிறது, எனவே இது சற்று மலிவானதாகவே கடைகளில் கிடைக்கிறது. அதனால் கட்டியான பெருங்காயத்தையே பயன்படுத்துங்கள். பெருங்காயத்தை டின் பாக்ஸ் அல்லது கண்ணாடி பாட்டிலில் சேமித்து வைப்பது நல்லது. இந்த வகையில் சேமிப்பதால் அதன் வாசனை நீண்ட காலத்திற்கு நீடிக்கும்.