Rajasthani Malai Pyaaz Sabzi: ரொட்டிக்கு ஏற்ற சைடிஷ்! ராஜஸ்தானி மலாய் பியாஸ் சப்ஜி - செய்வது இப்படித்தான்!

ராஜஸ்தானி மலை பியாஸ் சப்ஜி எப்படி செய்வதென்று பார்க்கலாம்.

Continues below advertisement

நாண், ரொட்டி ஆகியவற்றிற்கு ஏற்ற எப்படி செய்வது என்று தான் இப்போது நாம் பார்க்க போகின்றோம். மசாலாக்களை கொண்டு செய்யப்பட்ட இந்த ரெசிபி மிகவும் சுவையானதாக இருக்கும்.  குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த ரெசிபியை விரும்பி சாப்பிடுவர். இந்த ரெசிபியை மிகவும் சுலபமாக செய்து விட முடியும். வாங்க ராஜஸ்தானி மலாய் பியாஸ் செய்முறை பார்க்கலாம். 

Continues below advertisement

தேவையான பொருட்கள் 

20-25 சின்ன வெங்காயம், 2 தேக்கரண்டி நெய், 1 டீஸ்பூன் சீரகம். 1 வளைகுடா இலை, 1 பெரிய வெங்காயம் நறுக்கியது, 1  பச்சை மிளகாய், 2-3 பூண்டு பற்கள்,  1 தேக்கரண்டி சிவப்பு மிளகாய் தூள், 2 தேக்கரண்டி தனியா தூள், 1-2 கருப்பு ஏலக்காய், 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள், 2 தக்காளி அரைத்தது, 1/4 ஃப்ரெஷ் கிரீம், 1 தேக்கரண்டி கசூரி மேத்தி நசுக்கியது, 1/4 தேக்கரண்டி கரம் மசாலா, உப்பு -சுவைக்கேற்ப, ஒரு கைப்பிடி கொத்தமல்லி இலை, தண்ணீர் தேவைக்கேற்ப.

செய்முறை

1.இந்த சப்ஜியை செய்ய முதலில் சின்ன வெங்காயத்தை சிறிதளவு வதக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் ஒரு பாத்திரத்தில் குறைந்த தீயில் வதக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த வெங்காயத்தில் சிறிதளவு எண்ணெயை தெளித்து, உப்பும் சேர்க்க வேண்டும். 
 
2.ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து, எண்ணெய் சூடானதும் சிறிது நெய்யை சூடாக்கி, சீரகம், வளைகுடா இலை மற்றும் கருப்பு ஏலக்காய் சேர்க்க வேண்டும்
 
3.அவற்றை நன்றாக வதக்கி, பின்னர் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, சிவப்பு மிளகாய் தூள், மஞ்சள் தூள், கொத்தமல்லி தூள், கரம் மசாலா மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்க்கவும்.
 
4. இவற்றை நன்கு கலந்து தண்ணீர் மற்றும் தக்காளி கூழ் சேர்க்க வேண்டும். கடாயை ஒரு மூடியால் மூடி, சுமார் 7-8 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும். ஆறியதும், ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து மீண்டும் சில நிமிடங்களுக்கு வேக விட வேண்டும்.
 
5.அடுத்து, வறுத்த வெங்காயத்தை சேர்த்து, அனைத்தையும் சேர்த்து கிளற வேண்டும். இறுதியாக, சிறிது கிரீம் மற்றும் கசூரி மேத்தி மற்றும் ஃப்ரெஷ் கொத்தமல்லி இலைகளால் அலங்கரிக்கவும். இப்போது ராஜஸ்தானி மலாய் பியாஸ் சப்ஜி தயார்.
இது ரொட்டி,நாண் ஆகியவற்றுடன் வைத்து சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும். 
 
மேலும் படிக்க
 
Continues below advertisement