தேவையான பொருட்கள்

முட்டை 5

மிளகு தூள் -2 ஸ்பூன்

உப்பு- தேவையான அளவு

இஞ்சி - துண்டு 

பூண்டு- 5 பல்

வெங்காயம் 2

குடை மிளகாய் - 2 

சோயாசாஸ் -தேவையான அளவு

சில்லி சாஸ் -தேவையான அளவு

டெமேட்டோ சாஸ் -தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை

ஒரு பாத்திரத்தில் 5 மூட்டையை உடைத்து ஊற்றி அதில் உப்பு மிளகு தூளை சேர்த்து நன்றாக கலக்கி ஒரு இட்லி தட்டில் இட்லி போல் ஊற்றி வேக வைக்க வேண்டும்.

15 நிமிடம் வேக வைத்து முட்டையை எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் வேக வைத்து எடுத்த முட்டையை சிறு சிறு துண்டுகளாக வெட்டி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். (ப்ரைட் இட்லி செய்ய வெட்டுவது போல் வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு கப்பில் 100 கிராம் சோளமாவு, 100 கிராம்கடலைமாவு, ஒரு ஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலக்கவேண்டும். இதில் உங்கள் தேவைக்கு ஏற்ப உப்பை சேர்த்துகொள்ள வேண்டும். இந்த கலவையில் முட்டை துண்டுகளை புரட்டி  எடுத்து எண்ணெய்யில் விட்டு பொரித்து எடுக்க வேண்டும்.

பின் ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு அதில் இஞ்சி பூண்டை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்க வேண்டும். பின் பெரிய வெங்காயம் ஒன்றை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். இதில் நறுக்கிய குடை மிளகாயை சேர்க்க வேண்டும். இதில் தேவையான உப்பை சேர்த்து வதக்க வேண்டும். பின் டொமேட்டோ கெச் அப் 3 ஸ்பூன், சில்லி சாஸ் 3 ஸ்பூன் சேர்த்துகொள்ள வேண்டும். 

இதில் ஒரு அரை பூன் சோயா சாஸ் சேர்த்து வதக்க வேண்டும். மஞ்சூரியனின் உள்ள கலவை சற்று கிரேவியாக வேண்டும் என்றால் 2 ஸ்பூன் சோளமாவை சிறிதளவு தண்ணீரில் கலந்து இதில் சேர்த்து கொள்ளலாம். 

சுமார் 5 நிமிடம் அடுப்பை குறைந்த தீயில் வைத்து வேக வைக்க வேண்டும். இதையடுத்து பொரித்து வைத்துள்ள முட்டையை அந்த வாணலியில் சேர்த்து நன்றாக கலந்து இரண்டு நிமிடம் மூடி வைக்க வேண்டும். பின்னர் சிறிதளவு ஸ்பிரிங் ஆனியன் மற்றும் மல்லி தழையை கலந்து ஒரு நிமிடம் குறைவான தீயில் வைத்து மூடி வைக்க வேண்டும். அவ்வளவுதான் சுவையான முட்டை மஞ்சூரியன் தயார். 

மேலும் படிக்க

TN Public Exam: நெருங்கும் நாடாளுமன்றத் தேர்தல்; பொதுத் தேர்வுகள் எப்போது?- அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்

Chandra Babu Naidu: “52 நாட்கள் சிறைவாசம்” - இடைக்கால ஜாமீனில் வெளியே வந்தார் சந்திரபாபு நாயுடு.. தொண்டர்கள் உற்சாகம்