தேவையான பொருட்கள்




1/4 கப் ராகி மாவு



பால் 2 கப்

1 1/4 கப் வெல்லம்

1 டீஸ்பூன் ஏலக்காய் தூள்

1 சிட்டிகை உப்பு

 

செய்முறை 




ஒரு அடி கனமான பாத்திரத்தில் ராகி மாவை சேர்த்து சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து கட்டி இல்லாமல் கரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.



பிறகு கலந்த மாவை அடுப்பில் வைத்து கிளறிவிட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.( மாவு அடிப்பிடிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.



மாவு வெந்ததும் சற்று நிறம் மாறும் மேலும் சற்று கெட்டியாக மாறும். இப்போது பால் சேர்த்து நன்கு கலக்கி விட வேண்டும்.



பிறகு இதில் உப்பும் வெல்லத் தூளையும் சேர்த்து சேர்த்து நன்கு கலக்கி விட வேண்டும்



கடைசியாக ஏலக்காய் தூள் சேர்த்து கலக்கி இறக்கி விடவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான ராகிமால்ட் தயார்.


கேழ்வரகின் நன்மைகள் 


கேழ்வரகில் குறைந்த கொழுப்புச் சத்து மற்றும் அதிக அளவு நார்ச்சத்து இருப்பதால் எடை மேலாண்மைக்கு உதவும்.  இதில் உள்ள நார்ச்சத்து விரைவில் வயறு நிரம்பிய உணர்வை தரும். இதனால் நாம் குறைந்த கலோரிகளையே உட்கொள்வோம்.


இது கார்போஹைட்ரேட்டுகளின் செரிமானம் மற்றும் உறிஞ்சுதலை மெதுவாக்குகிறது. எடையைக் குறைக்க அல்லது பராமரிக்க முயற்சிக்கும் நபர்களுக்கு கேழ்வரகு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


கேழ்வரகில் கால்சியம் சத்து நிறைந்துள்ளது. ச இது எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற நிலைகளைத் தடுப்பதற்கும் அவசியம் என சொல்லப்படுகின்றது.  கால்சியம் பாஸ்பரஸ் மற்றும் மெக்னீசியம் போன்ற எலும்புகள் மற்றும் பற்களை பராமரிக்க உதவும் சத்துக்களும் இதில் நிறைந்துள்ளன.  இதை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் எலும்புகளை தொடர்ந்து ஆரோக்கியமா


கேழ்வரகில் உள்ள நார்ச்சத்து ஆரோக்கியமான செரிமான அமைப்பை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது மலச்சிக்கலைத் தடுக்கவும், வழக்கமான குடல் இயக்கங்களை ஊக்குவிக்கவும் உதவும் என்று சொல்லப்படுகிறது. ஆரோக்கியமான குடல் நுண்ணுயிரியை ஊக்குவிக்கவும் கேழ்வரகு உதவும் என்று சொல்லபப்டுகிறது. 


உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்க கேழ்வரகு உதவுகிறது. கேழ்வரகில் உள்ள கார்போஹைட்ரேட்டுகள் மெதுவாக ஜீரணமாகி, இரத்த ஓட்டத்தில் குளுக்கோஸ் படிப்படியாக வெளியேறுகிறது. விளையாட்டு வீரர்கள் போன்றவர்கள் கேழ்வரகில் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடல் ஆற்றலை மேம்படுத்த முடியும் என சொல்லப்படுகிறது.


மேலும் படிக்க 


Rice Chips : மக்களே.. சமைத்த சாதம் மீதமாகிவிட்டதா? வற்றலும், ஆப்பமும் ரெடி பண்ணலாம் வாங்க..


Badam Kesari: புரதச்சத்து நிறைந்த பாதாமில் நாவில் எச்சில் ஊறும் சுவையில் கேசரி செய்யலாம்.. செய்முறை இதோ!


Thenkuzhal Murukku : மொறு மொறு தேன் குழல் முறுக்கு : இப்படி செஞ்சு பாருங்க சுவை அள்ளும்..