உடல் எடையைக் குறைக்க எப்போதுமே அதிக புரதம் மற்றும் குறைந்த கலோரி உள்ள உணவுகள்தான் பரிந்துரைக்கப்படுகின்றன. அப்படியான உணவுகளில் அதிகம் விரும்பப்படுவது போஹா என்னும் அவல் உப்புமா.
போஹாவை ப்ரோட்டீன் நிறைந்த உணவு எனச் சொல்லலாம். சில நிமிடங்களில் செய்யக்கூடிய இந்தக் காலை உணவைத் தயாரிக்க, ஒரு சிறிய கிண்ணத்தில் போஹா மற்றும் ஓட்ஸ் இரண்டையும் ஊறவைக்கவும். கடாயில் நெய்யை சூடாக்கி கடுகு, கறிவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். சில நிமிடங்கள் இது நன்கு சமைத்ததும், பின்னர் பட்டாணி, கேரட், காளான் மற்றும் கேப்சிகம் சேர்த்து வதக்கவும்.
அவை ஒன்றாகச் சமைத்த பின்னர் அவல் மற்றும் ஓட்ஸை வாணலியில் சேர்க்கவும். பிறகு வாணலி குறைந்த தீயில் இருப்பதை உறுதி செய்து கொண்டு, அனைத்து பொருட்களையும் நன்கு கலக்கவும். ருசிக்க உப்பு, மஞ்சள் மற்றும் பிற மசாலாப் பொருள்களையும் சேர்க்கவும். பின்னர், அதில் பயிர் வகைகள் மற்றும் வேர்க்கடலை சேர்க்கவும். இதனை நன்கு கிளறிய பின்னர் அவலை இளஞ்சூட்டில் சுமார் 8 நிமிடங்கள் சமைக்கவும். பின்னர் சிறிது எலுமிச்சை சாறு பிழிந்து சூடாக பரிமாறவும்!
உணவியல் நிபுணர்களின் கூற்றுப்படி, அவல் இரத்த குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்த உதவும். இது சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள், சிக்கலான வைட்டமின்கள் மற்றும் முக்கியமான தாதுக்களின் நல்ல மூலமாகும். மேலும், இதில் நார்ச்சத்து அதிகம் கூடுதலாகக் கலோரிகள் இதில் குறைவாக உள்ளது, இதனால் இந்த உணவு எடைக் குறைப்புக்கு ஏற்றதாகும்.
இந்த உப்புமா புரதத்தின் நல்ல மூலமாகும், மேலும் உடலுக்குத் தேவையான லெப்டின் மற்றும் இன்சுலின் உற்பத்தியை உப்புமா மேம்படுத்தலாம். போஹாவில் சேர்க்கப்படும் முளைகட்டிய பயறில் அதிக நார்ச்சத்து உள்ளது, இது உடனே பசி ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும்.
ஊட்டச்சத்து நிபுணரின் கூற்றுப்படி அவலில் ஆரோக்கியமான நிறைவுறா கொழுப்பு அடங்கி உள்ளதால் அது நாம் உணவை உண்ட திருப்தியை ஏற்படுத்துகிறது மற்றும் உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கின்றன. அவை குறைந்த கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளதால் இன்சுலின் சுரப்பில் ஏற்படும் பாதிப்பை எதிர்த்துப் போராட உதவும்.