தேவையான பொருட்கள்




1 வாழைப்பூ, 1 1/2 கப் பாசுமதி அரிசி, 2 பெரிய வெங்காயம், 1 தக்காளி, 1டீஸ்பூன் காஷ்மீர் மிளகாய் தூள், 1டீஸ்பூன் பிரியாணி மசாலா தூள்.

 



அரைக்க

 

10 சாம்பார் வெங்காயம், 7 பல் பூண்டு, ஒரு துண்டு இஞ்சி, ஒரு துண்டு பட்டை, 2 கிராம்பு, 4 ஏலக்காய், கொத்தமல்லி இலை, புதினா இலை, உப்பு-தேவையான அளவு , 1டீஸ்பூன் எலுமிச்சை சாறு.

 

தாளிக்க

4டேபிள் ஸ்பூன் நெய், 2டேபிள் ஸ்பூன் எண்ணெய், ஒரு சிறிய துண்டு பட்டை, 2 கிராம்பு

 

செய்முறை


பாசுமதி அரிசியை நன்கு கழுவி 15 நிமிடங்கள் ஊற வைத்து, எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

 

வெங்காயம்,பூண்டு,பட்டை, கிராம்பு, ஏலக்காய் இஞ்சி ஆகியவற்றை மிக்ஸி ஜாரில் சேர்த்து மைய அரைத்துக்கொள்ள வேண்டும்.

 

மேலும் வெங்காயம், தக்காளி,பச்சை மிளகாய் மல்லி,புதினா ஆகியவற்றை நறுக்கி தயாராக எடுத்து வைக்க வேண்டும்

 

அடி கனமான பாத்திரத்தை கேஸ் ஸ்டவ்வில் வைத்து, எண்ணெய், நெய் சேர்த்து சூடானதும்,பட்டை,கிராம்பு, ஏலக்காய்,நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

 

பின்னர் நறுக்கிய தக்காளி, வெங்காயம், இஞ்சி உள்ளிட்டவை சேர்த்து அரைத்த விழுது சேர்த்து ஐந்து நிமிடங்கள் வதக்க வேண்டும்.



பின்பு மிளகாய் தூள்,பிரியாணி மசாலா தூள்,உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.அத்துடன் தயிர் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கி விட வேண்டும்.





பின்பு நறுக்கி வைத்துள்ள வாழைப்பூ,மல்லி,புதினா சேர்த்து நன்கு கலந்து விட்டு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து ஐந்து நிமிடங்கள் மூடி போட்டு, வேக வைக்க வேண்டும்.

 

வாழைப்பூ வேகும் வரை வரை வதக்கி,ஊறவைத்து வைத்துள்ள அரிசியை சேர்த்து வதக்கவும்.

 

பின்பு கொதிக்கவைத்த தண்ணீர் 1:2 விகிதத்தில் ஊற்றி, ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து மூடி வைக்க வேண்டும்.

 

ஒரு கொதி வந்ததும் எடுத்து ஒரு தோசை தவாவை ஸ்டவ்வில் வைத்து சூடானதும்,அதன் மேல் பிரியாணி பாத்திரத்தை வைத்து,இருபது நிமிடங்கள் மிக குறைவான தீயில் வைத்து வேக வைக்க வேண்டும்.