தேவையான பொருட்கள் 


பெரிய வெங்காயம் - 4, மைதா மாவு - கால் கப், அரிசி மாவு- 4 ஸ்பூன், இஞ்சி -ஒரு சிறிய துண்டு, பூண்டு - 10 பல், பச்சை மிளகாய் - 4, தனி மிளகாய் தூள் - ஒரு ஸ்பூன், உப்பு - அரை ஸ்பூன், எண்ணெய் - கால் லிட்டர்.


செய்முறை 


பெரிய வெங்காயங்களை மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கிக் கொள்ள வேண்டும். மெல்லியதாக இருந்தால் தான் வடை தட்டும் போது வெங்காயம் உதிராமல் இருக்கும்.


ஒரு துண்டு இஞ்சியை சிறிது சிறிதாக நறுக்கி கொள்ள வேண்டும்.  தோலுறித்த பூண்டையும் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும்.


பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.  


ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கைகளால் அவற்றை உதிர்த்து விட்டு, வெங்காயத்தில் இருந்து நீர் வரும் வரை அழுத்தம் கொடுத்து பிசைய வேண்டும். இதனுடன் நறுக்கி வைத்த இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் போன்றவற்றை சேர்த்து நன்றாக கலந்து விடவேண்டும்.


இதனுடன் கால் கப் அளவு மைதா மாவு, 4 ஸ்பூன் அரிசி மாவை எடுத்து சிறிது சிறிதாக வெங்காயத்துடன் சேர்த்து பிசைந்து கொள்ளவேண்டும்.


தண்ணீர் எதுவும் சேர்க்காமல் அப்படியே பிசைந்து கொள்ள வேண்டும். மாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து பிசைய வேண்டும். வெங்காயத்தில் உள்ள தண்ணீரே போதுமானதாக இருக்கும்.


பின்னர் ஒரு ஸ்பூன் மிளகாய் தூள் மற்றும் அரை ஸ்பூன் உப்பு ( அல்லது தேவையான அளவு உப்பு )சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.


அனைத்தையும் ஒன்றாக கலந்து நன்றாக பிசைந்த பின்னர்,  சிறு சிறு உருண்டைகளாக பிடித்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.


அடுப்பில் கடாய் வைத்து அதில் வடையை வேக வைத்து எடுக்க தேவையான அளவு எண்ணெய்( அல்லது கால் லிட்டர் எண்ணெய்) சேர்க்க வேண்டும். எண்ணெய் நன்றாக சூடான பின்னர் பிடித்து வைத்துள்ள உருண்டைகளை வடை போல் தட்டி எண்ணெயில் போட வேண்டும்.


வடையை இரண்டு பக்கமும் திருப்பி வேக விட்டு பொன்னிறமாக வெந்ததும் எடுத்துவிட வேண்டும். அவ்வளவுதான் சுவையான மொறு மொறு வெங்காய வடை தயார். இதை அப்படியே சாப்பிடலாம் அல்லது சட்னியுடன் வைத்து சாப்பிடலாம். 


மேலும் படிக்க


மட்டன் குருமாவை மிஞ்சும் சுவையில் பலாக்காய் - உருளைக்கிழங்கு குருமா... செய்முறை இதோ....


Crab Omlette :புரோட்டீன் நிறைந்த நண்டு ஆம்லேட்.... இப்படி செய்தால் சுவை சூப்பரா இருக்கும்...


Soya Chunks Gravy: சப்பாத்தி, சாதத்திற்கு ஏற்ற காம்போ! சோயா சங்க்ஸ் கிரேவி செய்வது எப்படி?