தேவையான பொருட்கள்


பிரண்டை – 2 கட்டு, புளி – 200 கிராம்,  பூண்டு – 200 கிராம்,  வர மிளகாய் தூள் – 4 டேபிள் ஸ்பூன்,  பெருங்காயத்தூள் – 1 டேபிள் ஸ்பூன்,  வெந்தயப் பொடி – 1/2 டேபிள் ஸ்பூன், கடுகு – 1 டேபிள் ஸ்பூன் , நல்லெண்ணெய் – 400 மில்லி, உப்பு – தேவையான அளவு.


செய்முறை


கைகளில் எண்ணைய் தடவிக் கொண்டு பிரண்டையை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.


பிரண்டையில் உள்ள நாரை நீக்கி, பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.


அடுப்பில் ஒரு கடாயை வைத்து கடாய் வைத்து, சூடானதும் அதில் 200 மில்லி நல்லெண்ணைய் சேர்க்க வேண்டும்.


எண்ணெய் நன்றாக சூடானதும், அதில் தோலுரித்த பூண்டை சேர்த்து வதக்கி, இதனுடன் நறுக்கி வைத்திருக்கும் பிரண்டையை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.


பிரண்டை வதங்கியதும் அதை அடுப்பில் இருந்து இறக்கி ஆற வைக்க வேண்டும். பின் மிக்ஸி ஜாரில் சேர்த்து மைய அரைக்க வேண்டும். 


இதில் புளி நாம் வைத்திருக்கும் புளியை கரைசல் ஆக்கி சேர்த்து அரைக்க வேண்டாம். தண்ணீர் சேர்க்காமல் அரைக்க கூடாது.தேவையான அளவு புளி கரைசலை ஊற்றி மைய அரைக்க வேண்டும்.


இப்போது அதே கடாயை அடுப்பில் வைத்து அதில் மீதம் உள்ள எண்ணெயை சேர்க்க வேண்டும்.  எண்ணெய் சூடானதும் கடுகு தாளிக்க வேண்டும்.


பிறகு வெந்தய பொடியை சேர்த்து அதனுடன் அரைத்து வைத்திருக்கும் விழுதையும் சேர்க்க வேண்டும். இதனுடன்,  பெருங்காயம், மிளகாய் தூள், உப்பு  சேர்த்து மீதம் இருக்கும் புளி கரைசலையும் சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும்.


இந்த கலவையில் இருந்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கி விட வேண்டும். அடுப்பை லேசான தீயில் வைத்து வேக வைக்க வேண்டும். கூறுகாயில் இருந்து எண்ணெய் பிரிந்து வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி விட வேண்டும். அவ்வளவுதான் சுவையான பிரண்டை ஊறுகாய் தயார். 


பிரண்டையின் பயன்கள் 


எலும்பு தேய்மானம் பிரச்சனை கொண்டவர்கள் பிரண்டை ரசம் வைத்து சாப்பிடுவது மிகவும் நல்லது என கூறப்படுகிறது. எலும்பு முறிவால் அவதிப்படுபவர்கள் பிரண்டையை வாரம் மூன்று முறை துவையலாகவோ, சட்னியாகவோ உணவுடன் சேர்ந்து சாப்பிட உடைந்த எலும்புகள் வேகமாக கூட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது


மேலும் படிக்க 


Pongal Sweets: பூசணிக்காய், பாகற்காய், பிஸ்தாவில் பர்ஃபி செய்வது எப்படி? பொங்கலுக்கு செஞ்சு அசத்துங்க!


Kavuni Arisi pongal: ஊட்டச்சத்து நிறைந்த பொங்கல்.. கருப்பு கவுனி அரிசியில் இந்த மாதிரி செய்து அசத்துங்க...


Karupatti Pongal: சத்தான கருப்பட்டி பொங்கல் செய்வது எப்படி? இப்படித்தான்!