பாசிபருப்பு – கால் கப்








கருப்பட்டி (பனைவெல்லம்) – முக்கால் கப் (பொடித்தது)








முந்திரி- திராட்சை – 2 டேபிள் ஸ்பூன்








ஏலக்காய்ப்பொடி – கால் ஸ்பூன்







நெய் – கால் கப்





குக்கரில் செய்யும் முறை


பாசிப்பருப்பை நன்கு மனம் வரும் வரை பொன்னிறமாக வறுத்துக்கொள்ள வேண்டும்.








வறுத்த பருப்பையும், அரிசியையும் நன்றாக கழுவி ஒரு மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.








தண்ணீரை வடித்துவிட்டு, குக்கரில் சேர்த்து, 3 கப் தண்ணீர் மற்றும் நெய் சேர்த்து 4 விசில் விட்டு இறக்க வேண்டும்.








 ஒரு பாத்திரத்தில் பொடித்த வெல்லத்தை சேர்த்து, கால் டம்ளர் தண்ணீருடன் பாகு காய்ச்சி ஆறவைத்து, வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். (வெல்லத்தில் உள்ள தூசிகளை அகற்றவே வெல்லத்தை காய்ச்சி வடிகட்டி சேர்ப்பது நல்லது)








முந்திரி மற்றும் திராட்சையை நெய்யில் வறுத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.








குக்கரில் பிரஷர் இறங்கியதும், தயார் செய்து வைத்துள்ள வெல்லப்பாகு, நெய், ஏலக்காய்ப்பொடி ஆகிய அனைத்தையும் அதில் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.








பின்னர் வறுத்து வைத்துள்ள முந்திரி, திராட்சையை சேர்த்து நன்றாக கலந்துவிடவேண்டும். தேவைப்பட்டால் தேங்காய் துருவி சேர்த்துக் கொள்ள வேண்டும். 





அவ்வளவுதான் சுவையான கருப்பட்டி பொங்கல் தயார்.

கருப்பட்டியின் பயன்கள் 


மனிதர்களுக்கு வயது ஏற, ஏற எலும்புகள் வலிமை குறையும். கருப்பட்டியில் கால்சியம் மற்றும் தாது சத்துகள் உள்ளது.  எனவே கருப்பட்டி சாப்பிடுவது எலும்புகளை பராமரிக்கவும், எலும்பு தேய்மானத்தை தடுக்கவும் உதவும் என சொல்லப்படுகிறது. 

 

வயதாகும்போது பெரும்பாலானோருக்கு தோலில் சுருக்கங்கள் வருவதோடு பளபளப்பும் குறைகிறது. கருப்பட்டியை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு தோலில் ஈரப்பதம் இருப்பதோடு சருமத்தின் பளபளப்பு அதிகரித்து, தோல் சுருக்கங்கள் ஏற்படாமல் தடுக்கும் என சொல்லப்படுகிறது. 

 

மேலும் படிக்க