இட்லி, தோசைக்கு ஒரே மாதிரியான சட்னி, சாம்பார் வைத்து சப்பிட்டு சலித்து விட்டதா? புதுசா ஏதேனும் ரெசிபியை சுவைக்க விரும்பினால் நீங்க வேர்க்கடலை குருமா ரெசிபியை முயற்சிக்கலாம். இது இட்லி, தோசைக்கு நல்ல காம்பினேஷனில் இருக்கும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த ரெசிபியை விரும்பி சாப்பிடுவர். 


தேவையான பொருட்கள் 


பெரிய வெங்காயம் - 1







தக்காளி – 2








பச்சை மிளகாய் – 2








இஞ்சி-பூண்டு விழுது - 1 ஸ்பூன்








சோம்புத் தூள் – அரை ஸ்பூன்








மிளகாய் தூள் – 2 ஸ்பூன்








கரம் மசாலா தூள் – 2 ஸ்பூன்








மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்








தேங்காய் - அரை முடியில் பாதி,








ஏலக்காய், கிராம்பு, பட்டை - தலா 1








முந்திரி (அ) பாதாம் – 12








புதினா, மல்லித் தழை – ஒரு கைப்பிடி








எண்ணெய் மற்றும் உப்பு - தேவையான அளவு








செய்முறை


வேர்க்கடலையை  வறுத்து தோல் நீக்கி அது மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.








தக்காளி, வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். முந்திரி மற்றும் தேங்காயை மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.


குக்கரில் எண்ணெய் சேர்த்து காய்ந்ததும் பட்டை, ஏலக்காய், கிராம்பு சேர்த்து  தாளிக்க வேண்டும்.








பின்னர்  நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவேண்டும். இதனுடன் இஞ்சி-பூண்டு பேஸ்ட் மற்றும் சோம்புத் பொடி சேர்த்து வதக்க வேண்டும்.








இதனுடன் தக்காளி, கரம் மசாலா பொடி, மஞ்சள் பொடி, மிளகாய் தூள், புதினா, கொத்தமல்லித் தழை மற்றும் உப்புச் சேர்த்து வதக்க வேண்டும். நன்கு வதங்கியவுடன், ஊறவைத்த வேர்க்கடலையை தண்ணீர் வடித்துவிட்டுச் சேர்த்து 2 கப் தண்ணீர் சேர்த்து 3 விசில்கள் வரும் வரை வேகவிட்டு இறக்கி கொள்ள வேண்டும். 


அவ்வளவு தான் சுவையான வேர்க்கடலை குருமா தயார். 


மேலும் படிக்க 


Gujarat Liquor Ban Lift: காந்தி பிறந்த மண்ணில் இனி மது குடிக்கலாம்.. ஆனா இங்க மட்டும்.. குஜராத் அரசு அதிரடி..


’எந்த உடை பிடிக்கிறதோ அணியுங்கள்; கல்வி நிலையங்களில் ஹிஜாப் தடை நீக்கம்’- கர்நாடக முதல்வர் சித்தராமையா அதிரடி


Ennore Oil Spill - CM Stalin: வெள்ள நீரோடு வெளிவந்த எண்ணெய் கசிவு - முதலமைச்சர் ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு..