2024ம் ஆண்டு பிறக்கப்போவதை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர். புத்தாண்டு அன்று வீட்டில்  இடம்பெறும் முக்கியமான விஷயங்களில் ஒன்று  அன்றைய நாளின் மிக முக்கியமான பகுதிகளில் ஒன்று இனிப்பு! ஆனால் உங்களுக்கு அதிக சர்க்கரை இருந்தால் அல்லது உங்கள் எடையை நீங்கள் கவனித்துக் கொண்டிருந்தால், இனிப்புகளை சாப்பிடுவது சிக்கலாக இருக்கலாம். ஆனால் இனிப்பு இல்லாத பண்டிகை என ஒன்று உள்ளதா என்ன? உங்கள் ஆரோக்கியத்தைக் கவனத்தில் கொண்டு உங்களுக்காகவே சர்க்கரை அல்லாத இனிப்பு வகைகள் பரிந்துரைக்கப்படுகின்றன. 


பாதாம் பர்ஃபி:


தேவையான பொருட்கள்:


- 500 கிராம் திரட்டிப்பால்
- 1 கப் பொடியாக்கப்பட்ட பாதாம்
- மேலே தூவுவதற்காக நறுக்கிய பாதாம்
- தேவைப்பட்டால் இனிப்பு அல்லது சர்க்கரை இல்லாத சிரப் சேர்க்கலாம்.


எப்படி செய்வது?


திரட்டிப்பாலை எடுத்துத் தனியாக வைக்கவும். முன்பே சூடேற்றப்பட்ட ஒரு பாத்திரத்தில் அதனை சில நிமிடங்கள் கொட்டிக் கிளரவும்,கூடவே பொடியாக்கபப்ட்ட பாதாமை சேர்க்கவும். அடுப்பைக் குறைந்த தீயில் வைத்து அதனைக் கிளரவும். அதன் பிறகு சுமார் 4 நிமிடங்கள் கழித்து, அதை வெப்பத்திலிருந்து அகற்றவும். வறுத்து நறுக்கிய பாதாமை மேலே தூவவும். நீங்கள் விரும்பினால் சர்க்கரை இல்லாத சிரப் சேர்க்கலாம்.


தேங்காய் பர்ஃபி:


தேவையான பொருட்கள்:


- புதிதாக துருவிய அல்லது உலர்ந்த தேங்காய்
- வெல்லம் தூளாக்கப்பட்டது
- எண்ணெய்
- பால்


எப்படி செய்வது?


ஒரு கடாயில், தேங்காய் துருவலை வறுக்கவும். பால் சேர்த்து கிளறவும். வெந்ததும் பாலை வடித்து தேங்காயை ஒரு பாத்திரத்தில் வைக்கவும். மற்றொரு கடாயில் எண்ணெய் விட்டு தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கிளறவும். பாத்திரத்தில் வைத்திருக்கும் பாலுடன் தூளாக்கப்பட்ட வெல்லத்தைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். சிறிது நேரம் கிளறவும். பின்னர் அது ஆறியதும், பர்ஃபி வடிவில் வெட்டி, சுவையான இனிப்புகளை உண்டு மகிழவும்.


கேசர் பிர்னி:


தேவையான பொருட்கள்


- ஆடை நீக்கப்பட்ட பால் - 2 கப்
- குங்குமப்பூ 
- ஊறவைத்த அரிசி
- பிஸ்தா
- பொடித்த பச்சை ஏலக்காய் - அரை தேக்கரண்டி
- சர்க்கரை இல்லாத சிரப்கள் - 3 தேக்கரண்டி


எப்படி செய்வது?


அரிசியை நைசாக அரைத்து இறக்கவும். ஒரு பாத்திரத்தில் பால் கொதிக்க வைக்கவும். குங்குமப்பூ இழைகளை ஒரு தேக்கரண்டி பாலில் ஊற வைக்கவும். வேகவைத்த பாலில், அரிசி விழுது சேர்த்து, தொடர்ந்து கிளறவும். பின்னர் குங்குமப்பூ பால் மற்றும் பச்சை ஏலக்காய் தூள் சேர்த்து, சர்க்கரை இல்லாத பாகு / உருண்டை சேர்க்கவும். கலவை கெட்டியாக ஆரம்பித்தவுடன், அதை வெப்பத்திலிருந்து அகற்றவும். சிறிது பிஸ்தாவை தூவி குளிர்விக்க வீட்டில் இருக்கும் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.