பனீர் பலருக்கும் ஃபேவரைட். பனீர் வைத்து விதவிதமான டிஷ் செய்யலாம்.  பாலக்கீரை பனீர் பராத்தா செய்வது எப்படி என காணலாம்.


தேவையான பொருட்கள்


கோதுமை மாவு - இரண்டு கப்


பாலக்கீரை -


இளஞ்சூடான நீர் - ஒரு கப்


ஓமம் - ஒரு ஸ்பூன்


நெய் - ஒரு டேபிள் ஸ்பூன்


ஸ்டஃப்பிங்


பனீர் - 200 கிராம்


பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 கப்


பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - ஒரு கைப்பிடியளவு


பச்சை மிளகாய பொடியாக நறுக்கியது - 1 


மிளகாய தூள் - 1 டீ ஸ்பூன்


உப்பு - தேவையான அளவு


செய்முறை


கோதுமை மாவில் வேக வைத்து அரைத்த பாலக்கீரை விழுது, உப்பு சேர்த்து  இளம் சூடான நீரை ஊற்றி சப்பாதி மாவு பதத்தில் தயார் செய்யவும். 20 நிமிடங்கள் ஊற விடவும். 


ஸ்டஃப்புங்கிற்கு பனீரை துருவி கொள்ள வேண்டும். அதோடு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம்  மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்றாக கலக்கி வைக்கவும். 


தயாராக வைத்துள்ள கோதுமை மாவில் சப்பாத்தி உருட்டி அதில் ஸ்டஃபிங்கை கொஞ்சம் வைத்து மீண்டும் தேய்த்தெடுக்கவும்.


மிதமான தீயில் தோசைக் கல்லில் கொஞ்சம் நெய் அல்லது எண்ணெய் தடவி சூடானதும் பனீர் பராத்தாவை போட்டு இரு புறமும் பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும்.


சுட சுட பாலக் பனீர் பராத்தா, தயிர், நறுக்கிய வெங்காயம் சேர்த்து சாப்பிடலாம்.


கடாய் பனீர் ரெசிபி


ஒரு கடாயில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை வதக்கி, பின்பு அரைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். வெங்காயம் குடமிளகாயை பொடியாக நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.


பனீரை சிறிய துண்டுகளாக நறுக்க வேண்டும். ஒரு கடாயில் வெண்ணெய் ஊற்றி பின்பு தாளிக்க பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை, ஆகியவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும்.


நறுக்கி வைத்துள்ள குடைமிளகாய் மற்றும் வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். இஞ்சி பூண்டு விழுதை இதனுடன் சேர்க்க வேண்டும். ஏற்கனவே வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வதக்கி அரைத்து வைத்துள்ள விழுதை இதில் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கி விட வேண்டும். பின்பு இதனுடன் இரண்டு ஸ்பூன் மிளகாய் தூள் சேர்க்க வேண்டும்.


இதனுடன் ஒரு ஸ்பூன் பனீர் பட்டர் மசாலா மற்றும் உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து கலவையை கொதிக்க விட வேண்டும்.பின்பு நறுக்கிய பன்னீர் துண்டுகளை சேர்த்து 5 நிமிடம் கழித்து இறக்க வேண்டும். இப்போது சுவையான  கடாய் பனீர் ரெடி. 


 பனீர் ஆன்டிஆக்ஸிடண்ட் நிறைந்துள்ளது.  புரதம் தவிர, வைட்டமின்கள் ஏ, பி-1, பி-3, பி-6, செலினியம், வைட்டமின் ஈ,  போன்ற பல சத்துக்களும் பனீரில் காணப்படுகின்றன. அவை ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவுகின்றன, இதன் காரணமாக தோல் ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் மாறும். 


பனீர் கால்சியம் மற்றும் பாஸ்பரஸின் வளமான ஆதாரமாக இருப்பதால் எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது.  பனீர் செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது மற்றும் மலச்சிக்கல் பிரச்சனையையும் குணப்படுத்தும் என்று சொல்லப்படுகிறது. 




மேலும் வாசிக்க..


Paneer Paratha: சுவையான பனீர் பராத்தா செய்து அசத்துங்க - ரெசிபி இதோ!