பனீர் பிடிக்காதவர்கள் இருக்க முடியுமா என்ன? அவர்களுக்கு பனீர் பராத்தா எப்படி பிடிக்காமல் போகும்?


தேவையான பொருட்கள்


கோதுமை மாவு - இரண்டு கப்


இளஞ்சூடான நீர் - ஒரு கப்


நெய் - ஒரு டேபிள் ஸ்பூன்


ஸ்டஃப்பிங்


பனீர் - 200 கிராம்


பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 கப்


பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - ஒரு கைப்பிடியளவு


பச்சை மிளகாய பொடியாக நறுக்கியது - 1 


மிளகாய தூள் - 1 டீ ஸ்பூன்


உப்பு - தேவையான அளவு


செய்முறை


கோதுமை மாவில் உப்பு சேர்த்து இளம் சூடான நீரை ஊற்றி சப்பாதி மாவு பதத்தில் தயார் செய்யவும். 20 நிமிடங்கள் ஊற விடவும். 


ஸ்டஃப்புங்கிற்கு பனீரை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். அதோடு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் அதோடு மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்றாக கலக்கி வைக்கவும். 


தயாராக வைத்துள்ள கோதுமை மாவில் சப்பாத்தி உருட்டி அதில் ஸ்டஃபிங்கை கொஞ்சம் வைத்து மீண்டும் தேய்த்தெடுக்கவும்.


மிதமான தீயில் தோசைக் கல்லில் கொஞ்சம் நெய் அல்லது எண்ணெய் தடவி சூடானதும் பனீர் பராத்தாவை போட்டு இரு புறமும் பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும், 


தயர் உடன் சூடான பனீர் பராத்தா நல்ல காம்பினேசன். சுவைத்து சாப்பிடுங்கள். 


புதினா உருளைக்கிழங்கு மசாலா


தேவையான பொருட்கள்


வேகவைத்த உருளைக்கிழங்கு - 5 


புதினா இலைகள் நறுக்கியது - ஒரு கப் 


பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 கப்


தக்காளி விழுது - ஒரு கப்


பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது - 3


இஞ்சி பூண்டு விழுது - ஒரு ஸ்பூன்


தாளிக்க


சீரகம் - ஒரு ஸ்பூன்


கடுகு - ஒரு ஸ்பூன்


மஞ்சள் தூள் = ஒரு ஸ்பூன்


கரம் மசாலா - ஒரு ஸ்பூன்


கொத்தமல்லி தூள் - ஒரு ஸ்பூன்


உப்பு - தேவையான அளவு


செய்முறை:ஸ்பைஸி சீஸி பனீர் ஃப்ராங்கி... வீட்டிலேயே ஆரோக்கியமாகச் செய்வது எப்படி?


அடுப்பில் மிதமான தீயில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், மஞ்சள் தூள், பச்சை மிளகாய் எல்லாம் சேர்க்க வேண்டும்.


பின்னர், வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். வெங்காயம் பொன் நிறமாக மாறியதும் அரைத்த தக்காளி விழுதை சேர்க்கவும். இதோடு, கரம் மசாலா தேவையெனில் மிளகாய் தூள் கொஞ்சம் சேர்க்க வேண்டும்.


எல்லாம் நன்றாக வதங்கியதும் வேகவைத்த உருளை கிழங்கை சேர்த்து கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். பின்னர், புதினா இலைகள் சேர்த்து 2 நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கினால், ருசியான புதினா உருளை மசாலா ரெடி. 




மேலும் வாசிக்க..


Food: இதெல்லாம் அதிகமா சாப்பிட்டா சீக்கிரம் வயசான தோற்றம் வந்துடும் - என்னென்ன?