உடலின் ஆரோக்கியத்தை பேண ஒவ்வொரு நாளும் குறைந்த அளவேனும் உடற்பயிற்சி அவசியமான மருத்துவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அந்த வகையில் உடற்பயிற்சியின் போது, உடலுக்கு வலு சேர்க்கும் வகையில் இயற்கை முறையிலான பான வகைகள் அதாவது ஜூஸ் வகைகளை எடுத்துக் கொள்ளும்போது உடல் புத்துணர்ச்சி அடைகிறது. உடலை சோர்ந்து போகாமல் வைத்திருக்க இந்த ஜூஸ் வகைகள் பெரிதும் உதவுகின்றன.
ஜூஸ் வகைகள்:
கடுமையான உடற்பயிற்சிக்கு பின்னர் மிகவும் சத்தான ஆரோக்கியமான பழச்சாறுகளை அருந்துவது மிகவும் முக்கியமானதாகும். உடற்பயிற்சியின் முன்னரோ அல்லது பின்னரோ எளிமையான வகையில் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்வது சிறப்பு என்று கூறப்படுகிறது .அதிலும் கடினமான உணவு வகைகள், மாப் பொருட்கள், எளிதில் ஜீரணமாகாத உணவகங்களை தவிர்த்து பழச் சாறுகளை அருந்துவது மிகவும் நல்லது என சொல்லப்படுகிறது.
ஆகவே உடற்பயிற்சியின் போது எவ்வகையான பழச்சாறுகளை எடுத்துக் கொண்டால் உடல் சோர்வடையாமல் புத்துணர்ச்சியாக இருக்கும் என பார்க்கலாம்:
1.ஆப்பிள் மற்றும் சப்ஜா விதைகள் பழச்சாறு:
ஒரு நறுக்கிய ஆப்பிள், ஒரு கப் தயிர், ஒரு தேக்கரண்டி வேர்க்கடலை வெண்ணெய் மற்றும் ஒரு தேக்கரண்டி சப்ஜா விதையை எடுத்து வைக்கவும்.
இந்த பொருட்கள் எல்லாவற்றையும் நன்றாக கலந்து கொள்ளவும்.
இந்த பழக்கலவையை குளிர்சாதன பெட்டியில் வைத்து பின்னர் பரிமாறவும்.
2. பெர்ரி மற்றும் வாழைப்பழ கலவை:
ஒரு கப் உறைந்த கலந்த பெர்ரி, ஒரு உறைந்த பழுத்த வாழைப்பழம், அரை கப் கொழுப்பற்ற தயிர்,
¼ கப் ஆரஞ்சு சாறு மற்றும் ஒரு டீஸ்பூன் இலவங்கப்பட்டை.
நன்கு மென்மையாகும் வரை மிக்ஸியில் விட்டு அரைத்து எடுக்கவும்.
பின்னர் குளிர்சாதன பெட்டியில் வைத்து பரிமாறவும்
3. முலாம்பழம் மற்றும் கிவி பழக் கலவை
1 துண்டு பிளம்
1 கிளாஸ் பால்
1 தேக்கரண்டி தேன்
½ கப் ஓட்ஸ்
முலாம்பழம் 2 துண்டுகள்
திராட்சை
நறுக்கிய கிவி
பப்பாளி 2-3 துண்டுகள்
அனைத்து பொருட்களையும் ஒரு பிளெண்டரில் போட்டு நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்
பின்னர்
குளிர்ச்சியாக பரிமாறவும்
4. வாழைப்பழம் மற்றும் தேன் கலவை:
வாழைப்பழத்தை உரித்து, தயிர் சேர்த்து, அதில் 2 டீஸ்பூன் தேன், 2 டீஸ்பூன் பூசணி விதைகள் சேர்க்கவும். பின்னர் ஒரு டம்ளர் தண்ணீரை அதில் சேர்த்து மென்மையாகும் பிளண்டரில் அடித்துக் கொள்ளவும். பரிமாறும் போது பூசணி விதைகள் மற்றும் தேன் கொண்டு மேல் மட்டத்தில் அலங்கரிக்கவும்.
5 .ஸ்ட்ராபெரி மற்றும் வாழைப்பழ கலவை:
வாழைப்பழம், பால், தேன் மற்றும் ஒரு சில ஸ்ட்ராபெர்ரிகளை சேர்க்கவும். பின்னர் நன்கு மென்மையாகும் வரை அதை கலக்கவும். பரிமாறும் போது சிறிது புதினா சேர்த்துக் கொள்ளவும் .
ஆகவே இயற்கையாக செய்யப்படும் பழங்களின் கலவையானது உடலுக்கு நல்ல ஊட்டச்சத்தையும், ஆரோக்கியத்தையும், புத்துணர்ச்சியை வழங்கும். உடற்பயிற்சியின் போது இவ்வகையான பழங்கள் சேர்ந்த பழச்சாறு, பல கலவையை எடுத்துக் கொள்ளும் போது உடல் நன்கு வலுவடையும்.