தேவையான பொருட்கள் 


வெங்காயம் - அரை கிலோ


மாங்காய் - பெரியது 1 


கடுகு - தேவையான அளவு 


வெந்தயம் - அரை ஸ்பூன்


மிளகாய் தூள் - இரண்டு டேபிள் ஸ்பூன்


உப்பு - தேவையான அளவு 


கறிவேப்பிலை - சிறிதளவு 


எண்ணெய் - தேவையான அளவு 


செய்முறை


அரை கிலோ பெரிய வெங்காயத்தை தோல் நீக்கி அதை காய் சீவலை கொண்டு துருவிக் கொள்ள வேண்டும்.  புளிப்பான ஒரு பெரிய சைஸ் மாங்காயின் தோலை நீக்கி, இதையும் துருவி எடுத்துக் கொள்ள வேண்டும். 


இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் கடுகு, ஒரு டேபிள் ஸ்பூன் வெந்தயம் சேர்த்து வறுத்து எடுத்து இதை இடித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.


இப்போது அதே கடாயில் மூன்று டேபிள் ஸ்பூன் அளவு நல்லெண்ணெய் சேர்த்து கடுகு கறிவேப்பிலை சேர்த்து பொரிந்ததும், இதனுடன் துருவிய வெங்காயை சேர்த்து அதன் பச்சை வாசம் போகும் வரை வதக்கி கொள்ள வேண்டும். இதனுடன் துருவிய மாங்காயையும் சேர்க்க வேண்டும்.


இதை நன்றாக கிளறி விட்டு இரண்டு நிமிடம் மூடி போட்டு வேக வைக்க வேண்டும். இதனுடன் இரண்டு டேபிள் ஸ்பூன் அளவு மிளகாய் தூள், கடுகு வெந்தயப் பொடியை இதனுடன் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.  இதை நன்றாக கலந்து விட வேண்டும்.


இதன் பச்சை வாசனை போய் எண்ணெய் பிரிந்து வரும் அளவுக்கு இதை வேக வைக்க வேண்டும். மூடி போட்டு வேக வைத்தால் இரண்டு நிமிடத்தில் வெந்து விடும். 


இதனுடன் ஒரு டேபிள் ஸ்பூன் அளவு நாட்டுச் சர்க்கரை அல்லது பொடித்த வெல்லம் சேர்த்து கலந்து விட்டு அடுப்பை அணைத்து விட வேண்டும். இட்லி, தோசை, சப்பாத்தியுன் வைத்து சாப்பிட இந்த டிஷ் மிகவும் நன்றாக இருக்கும். 


மேலும் படிக்க: Sago Milk Pudding : வெயிலுக்கு இதமா ஜவ்வரிசி பால் புட்டிங்.. எளிமையான செய்முறை இதோ!


Kale Rice Recipe:கால்சியம் நிறைந்த கேல் கீரை ரைஸ் - வீட்டிலே செய்வது எப்படி?