Kale Rice Recipe:கால்சியம் நிறைந்த கேல் கீரை ரைஸ் - வீட்டிலே செய்வது எப்படி?

Kale,Cucumber Rice Recipe: கேல் கீரை ஊட்டச்சத்து நிறைந்தது. அதை வைத்து செய்யும் உணவுகள் சிலவற்றை காணலாம்

Continues below advertisement

வெள்ளரிக்காய் கேல் கீரை இரண்டையும் சேர்த்து புலாவ் செய்வது எப்படி என்று பார்க்காலம். உணவில் தினமும் ஏதாவது ஒரு கீரையை சேர்த்து கொள்ளலாம்.

Continues below advertisement

என்னென்ன தேவை?

வெள்ளரிக்காய் - ஒரு கப்

அரைத்தெடுத்த கேல் கீரை விழுது - ஒரு கப்

ஊற வைத்த அரிசி - ஒரு கப்

பச்சை மிளகாய் - 2

வெங்காயம் - 2

எண்ணெய்- தேவையான அளவு

கரம் மசாலா - அரை டீ ஸ்பூன்

பிரியாணி இலை - 1 

பச்சை ஏலக்காய் - 2

கிராம்பு - 1

கொத்தமல்லி தூள் - 1 ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

இஞ்சி - பூண்டு விழுது - அரை டீ ஸ்பூன்

எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை

சுத்தம் செய்யப்பட்ட கேல் கீரையை மிக்ஸியில் கொஞ்சமாக அரைத்தெடுக்கவும். இதை செய்ய குக்கர்  பயன்படுத்தலாம். அடுப்பில் மிதமான தீயில், குக்கரை வைத்து எண்ணெய் அல்லது நெய் 4 டேபிள் ஸ்பூன் ஊற்றவும். நெய் சூடானதும் அதில், பச்சை ஏலக்காய், பிரியாணி இலை, கிராம்பு, சீரகம், பச்சை மிளகாய், நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். 

வெங்காயம் நன்றாக வதங்கியதும், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து கேல் கீரை விழுதை சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். கேல்கீரை கொஞ்சம் நிறம் மாறியதும் நறுக்கிய வெள்ளரிக்காயை சேர்த்து, கரம் மசாலா, உப்பு சேர்த்து கலக்கவும். இதோடு, ஊற வைத்த அரிசியை சேர்த்து குக்கரை மூடி 3 விசில் வர விடவும். புலாவ் மாதிரி செய்யும் முறை. ரைஸ் மாதிரி செய்ய வேண்டும் என்றால் அரிசியை வேக வைத்து எடுக்கவும். கேல் கீரையுடன் பனீர் சேர்த்து செய்யலாம். பனீர் உடன் கேல் கீரை சேர்த்து செய்யௌம் புலாவ், சாலட் நன்றாக இருக்கும். கேல் கீரையுடன் வெள்ளரிக்காய் சேர்த்து ஜூஸ் செய்யலாம்.

கேல் கீரை சாதம் செய்யும்போது அதை நறுக்கி வதக்கியும் செய்யலாம். அரைக்க வேண்டாம்.

கேல் கீரை

காலிஃப்ளாவர், கோஸ் போல கேல் கீரை brassica oleracea வகையைச் சேர்ந்தது. பல வண்ணங்களில் கேல் கீரைகள் கிடைக்கும். க்ளோரோபில், கால்சியம், இரும்புச்சத்து நிறைந்தது. சீரற்ற ஹார்மோன் சுரப்பு, கொழுப்பு மேலாண்மையில் கேல் கீரை சிறந்ததாக கூறப்படுகிறது.

ஒரு கப் கேல் கீரையில் ஒரு நாளைக்குத் தேவைப்படும் அளவில் 5 கிராம் நார்ச்சத்து, 15 சதவீதம் கால்சியம், வைட்டமின் பி6, 40 சதவீதம் மக்னீசியம், 180 சதவீதம் வைட்டமின் ஏ, 200 சத வீதம் வைட்டமின் சி மற்றும் 1020 சதவீதம் வைட்டமின் கே ஆகியவை இருக்கின்றன. மேலும் வைட்டமின் ஈ, இரும்பு சத்து, துத்தநாகம், ஃபோலேட் ஆகியவையும் குறைந்த அளவில் இருக்கின்றன. இதில் உள்ள காரோட்டினாய்டுகள், ஃபிளேவனாய்டுகள் போன்றவை என்றும் இளமையாக இருக்க உதவுகிறது. இதில் கலோரி குறைவு என்பதால் கெட்ட கொழுப்பு சேரும் என்ற பேச்சுக்கே இடமில்லை.

கேல் கீரையில் சாலட் செய்து சாப்பிடலாம். கேல் கீரையுடன் quinoa -சேர்த்து சாப்பிடுவது நல்லது. அதிக நார்ச்சத்து நிறைந்த உணவு.


 

Continues below advertisement
Sponsored Links by Taboola