தேவையான பொருட்கள்



  • 2 கப் துவரம் பருப்பு 

  • 500 கிராம் நன்றாக அரைத்த வெல்லம்

  • 1 தேக்கரண்டி ஏலக்காய் தூள்

  • 1.5 கப் நன்றாக துருவிய தேங்காய்

  • 350 கிராம் மைதா

  • 7 தேக்கரண்டி எண்ணெய் (அல்லது தேவைக்கேற்ப)

  • உப்பு ஒரு சிட்டிகை

  • 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் 


செய்முறை


1. பருப்பை 20 நிமிடங்கள் ஊறவைக்கவும், இதற்கிடையில் மாவை தயார் செய்ய வேண்டும்.

 

2. மைதா, உப்பு, மஞ்சள் மற்றும் தண்ணீர் சேர்த்து மாவை பிசைய வேண்டும். 

 

3.கலவை மிகவும் ஒட்டும் போதெல்லாம் எண்ணெய் சேர்க்க வேண்டும். எண்னெய்க்கு பதிலாக நெய் பயன்படுத்தலாம்.

 

4.மாவை குறைந்தது இரண்டு மணி நேரம் அப்படியே வைத்து விட வேண்டும்.

 

5.திணிப்புக்காக (Stuff) பருப்பை 4 அல்லது 5 கப் தண்ணீரில் மென்மையாகும் வரை வேக வைக்க வேண்டும்.

 

6.பிறகு தண்ணீரை வடித்துவிட்டு பருப்பை ஆற விட வேண்டும். 

 

7.பருப்பை தேங்காய், வெல்லம், ஏலக்காய் சேர்த்து மிருதுவான பேஸ்ட் ஆகும் வரை தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக் கொள்ள வேண்டும். 

 

8.கலவை கெட்டியாகும் வரை குறைந்த தீயில் கிளறி விட்டு பிறகு ஆறவிட வேண்டும்.

 

9.மாவையும் பருப்பு-தேங்காய் கலவையையும் சம பாகங்களாகப் பிரித்து, சிறிய உருண்டைகளாக்கி கொள்ள வேண்டும்.

 

10.அடுத்து, உருட்டி வைத்துள்ள மாவு உருண்டைகளை எடுத்து பூரிக்கு உருட்டுவது போல் உருட்டிக்கொள்ள வேண்டும். உருட்டிய ஒரு ரொட்டியின் மீது  திணிப்பதற்காக தயார் செய்து வைத்துள்ள கலவையை ஒன்றரை டீஸ்பூன் அளவு எடுத்து வைக்க வேண்டும். பின்னர் அதன் மீது மற்றொறு ரொட்டியை வைத்து அனைத்து பக்கங்களிலும் விளிம்புகளை மூடி விட வேண்டும்

 

11.நெய் தடவிய பட்டர் பேப்பரில், இதை வைத்து மீண்டும் ஒருமுறை லேசாக உருட்டிக் கொள்ள வேண்டும். 

 

12. அடுப்பை மிதமான தீயில் வைத்து, நெய் தடவிய தவாவில் இதை போட்டு, பொன்றமாகும் வரை இருபுறமும் திருப்பி போட்டு வேக வைக்க வேண்டும். (விளிம்புகளைச் சுற்றி எண்ணெய் சேர்த்துக் கொண்டே இருக்கவும்)
 

13.பொன்னிறமானதும், அதை அடுப்பில் இருந்து இறக்கி, ஒரு குமிழ் நெய்யுடன் பரிமாறவும்.

 

மேலும் படிக்க