வடைகள் தயாரிக்க..
- 1 கப் உடைத்த பாசி பருப்பு
- 1/2 கப் ரோல்டு ஓட்ஸ்
- 1 சிறிய வெங்காயம், பொடியாக நறுக்கியது
- 2 பச்சை மிளகாய், பொடியாக நறுக்கியது
- 1/2 அங்குல இஞ்சி, துருவியது
- ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள்
- 1/2 டீஸ்பூன் சீரகம்
- ருசிக்கேற்ப உப்பு
- எண்ணெய்
- ஒன்று சேர்ப்பதற்கு:
- 2 கப் தயிர் அடித்தது
- புளி சட்னி (கடையில் வாங்குவது அல்லது வீட்டில் செய்வது)
- வறுத்த சீரகப் பொடி
- சிவப்பு மிளகாய் தூள்
- கொத்தமல்லி இலைகள், நறுக்கியது
செய்முறை
வடைக்களுக்கு:
1 கப் துருவிய பருப்பை தண்ணீரில் 3-4 மணி நேரம் ஊறவைத்து, .பின் தண்ணீரை வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.
1/2 கப் ரோல்டு ஓட்ஸுடன் பருப்பை சேர்த்து மென்மையாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பெருங்காயம், சீரகம், உப்பு சேர்த்து கலக்கவும்.
ஒரு ஸ்பூன் மாவை நெய் தடவிய பணியாரம் சுடும் வாணலியில் பொன்னிறமாகும் வரை வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
சாட் மசாலாவுக்கு
2 கப் தயிரில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து அடித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
இவற்றை வெதுவெதுப்பான சிறிதளவு தண்ணீரில் ஊறவைக்கவும், பின்னர் வடையில் இருக்கும் தண்ணீரை பிழிந்து விட வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் வடைகளை அடுக்கி, அவற்றின் மீது தயிர் ஊற்ற வேண்டும்.
புளி சட்னி, வறுத்த சீரகத் தூள், சிவப்பு மிளகாய் தூள் மற்றும் நறுக்கிய கொத்தமல்லி இலைகளை தூவவும்.
வடைகள் நன்கு தயிரில் ஊறினால், மணக்க மணக்க தயிர் வடை ரெடி..
மேலும் படிக்க