ஹரா பரா சோயா கபாப்கள் மிகவும் சுவையானது. இதை குறைந்த நேரத்தில் செய்து விட முடியும். சோயா, பச்சை பட்டாணி, பாலக்கீரை, மற்றும் மசாலா தூள் சேர்ந்து இந்த கபாபை மிகவும் சுவையானதாக மாற்றி விடும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த ரெசிபியை விரும்பி சாப்பிடுவர். 


தேவையான பொருட்கள்



  • 1 கப் சோயா துகள்கள்

  • 1/2 கப் பச்சை பட்டாணி

  • 2 கப் பாலக் கீரை நறுக்கியது

  • 1 வெங்காயம், பொடியாக நறுக்கியது

  • 2 அங்குல இஞ்சி

  • 6-8 பூண்டு கிராம்பு

  • 5-6 பச்சை மிளகாய்

  • 1 தேக்கரண்டி சாட் மசாலா

  • 1 டீஸ்பூன் மிளகாய் தூள்

  • 1 தேக்கரண்டி கரம் மசாலா தூள்

  • 1/2 தேக்கரண்டி பெருஞ்சீரகத் தூள்

  • 2 டீஸ்பூன்  கடலைப் பருப்பு, லேசாக வறுத்தது

  • 1/2 கப் புதினா இலைகள்

  • 1 கப் கொத்தமல்லி இலைகள்

  • 1/2 கப் பிரட்தூள்கள்

  • 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு

  •  உப்பு சுவைக்கேற்ப

  • பொரிப்பதற்கு எண்ணெய்


செய்முறை 


1. 2 கப் தண்ணீரில் சோயா துகள்கள் மற்றும் 1/2 தேக்கரண்டி உப்பு சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். பின் அடுப்பில் இருஎது அதிகப்படியான தண்ணீரை வடிகட்டி, பிழிந்து சோயாவை எடுத்துக் கொள்ள வேண்டும். 

 

2. கீரையை  இஞ்சி, பூண்டு மற்றும் பச்சை மிளகாயுடன் சுமார் 5 நிமிடங்கள் ஆவியில் வேகவைக்க வேண்டும்.

 

3.ஆறவைத்து, பின் பச்சைப் பட்டாணியுடன் இந்தப் பொருட்களை ஒன்றாகக் கலக்கவும். கரடுமுரடான பேஸ்டாக அரைக்கவும்.

 

4.ஒரு பெரிய கிண்ணத்தில், இந்த கீரை கலவையை, சோயா துகள்கள், வெங்காயம், கொத்தமல்லி மற்றும் புதினாவுடன் சேர்க்க வேண்டும்.
 


5. மேலே பட்டியலிடப்பட்டுள்ள  மசாலா தூள்களுடன் 2 தேக்கரண்டி சுவைக்கேற்ப உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

 

6.எலுமிச்சை சாறு மற்றும் வறுத்த கடலை மாவு சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.

 

7. இப்போது இந்த கலவையை உருண்டைகளாக எடுத்து அதை டிக்கிகளாக கைகளாலேயே தயாரித்துக் கொள்ள வேண்டும்.  

 

8. தயாரித்த டிக்கியை பிரெட் துகள்களில் புறட்டி எடுத்து எண்ணெயில் பொரித்தெடுக்க வேண்டும். ( அடுப்பை மிதமான தீயில் வைத்து பொரித்தெடுக்க வேண்டும்) அவ்வளவுதான் சூடான ஹரா பரா சோயா கபாப்கள் தயார். இதை  கெட்ச்அப் அல்லது சட்னியுடன் சூடாக பரிமாறலாம்.
 

மேலும் படிக்க