தேவையான பொருட்கள்
கோதுமை மாவு - ஒரு கப்
நெய் - அரை கப்
சர்க்கரை - ஒரு கப் சர்க்கரை
உப்பு - ஒரு சிட்டிகை
ஏலக்காய் - ஒரு சிட்டிகை
செய்முறை
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் ஒரு கப் சர்க்கரை மற்றும் ஒன்றரை கப் அளவு தண்ணீர் சேர்க்கவும். சர்க்கரை உருகும் வரை கரண்டி கொண்டு கிளறி விட்டுக் கொண்டே இருக்க வேண்டும். இப்போது அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் சர்க்கரை அளந்த கப்பால் அரை கப் அளவு நெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். அல்லது கால் கப் எண்ணெய், கால் கப் நெய் சேர்த்துக் கொள்ளலாம்.
இதில் ஒரு கப் கோதுமை மாவை சேர்த்து அடுப்பை லேசான தீயில் வைத்து மாவு லேசான பொன்னிறம் ஆகும் வரை வறுக்க வேண்டும். இதனிடையே ஒரு சிட்டிகை அளவு உப்பு, சிறிது ஏலக்காய் பொடி சேர்த்து கிளறவும். ஏற்கனவே தயாரித்து வைத்துள்ள சர்க்கரை தண்ணீரை இதில் சிறிது சிறிதாக சேர்த்து கிளற வேண்டும். ஒருமுறை தண்ணீர் சேர்த்ததும் மொத்த தண்ணீரும் உறிஞ்சி மாவு கலவை அல்வா பதம் வரும் பின்னர் மீண்டும் சிறிது சர்க்கரை தண்ணீர் சேர்க்க வேண்டும்.
இந்த முறையில் சர்க்கரை தண்ணீரை நான்கு முறை சேர்த்து கிளறி விடவும். அல்வா பதம் வரும் வரை கிளறி விடவும். பின் அடுப்பை அணைத்து விட வேண்டும். இதை சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளலாம். அல்லது அல்வா போல் ஒரு பெளலில் வைத்து ஸ்பூன் வைத்து பரிமாறலாம். இதை ஒரு வாரம் வரையில் ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடலாம். இதன் சுவை மிகவும் நன்றாக இருக்கும்.
மேலும் படிக்க
Volume Eating: குறைந்த கலோரி உணவுகள் உடல் எடையை குறைக்குமா? நிபுணர்கள் சொல்வதென்ன?