இந்தியாவில் கொண்டாடப்படும் பிரபலமான பண்டிகைகளில், நவராத்திரி மிக பிரம்மாண்டமான ஒன்றாகும். இந்தியாவின் மற்ற பண்டிகைகளைப் போலவே, நவராத்திரியும் திருவிழா போல் கொண்டாடப்படுகிறது.நவராத்திரியை திருவிழாவாக கொண்டாடுவதால் நம் ஆன்மீக ஆற்றல்கள் வெளிப்படடுவதாக நம்பப்படுகிறது.
நம் ஆன்மிக பயணத்தில் துர்கா, லட்சுமி மற்றும் சரஸ்வதி ஆகிய மூவரின் கோட்பாடுகளை நாம் கடந்து செல்கிறோம்.அதாவது கல்வி,செல்வம்,வீரம் இவை மூன்றும் அனைவரின் வாழ்விலும் மிக முக்கியமான விஷயமாகும். ஒன்பது இரவுகள் என்று பொருள்படும் நவராத்திரி, துர்கா, லட்சுமி மற்றும் சரஸ்வதி வடிவங்களில் தெய்வீக வழிபாட்டை ஒவ்வொரு மூன்று நாட்களும் வழிபடுகிறார்கள். 10-வது நாள் மிக முக்கிய நாளாகும். இந்நாளில் தான் விஜயசமி கொண்டாடப்படுகிறது.
துர்கா,லட்சுமி,சரஸ்வதி ஆகிய மூவரையும் இவ்வுலகில் வழிபடக் காரணம்,எதிர்மறை எண்ணங்களை அழித்து நேர்மறை பண்புகளை வளர்க்கும் தன்மை இம்மூவரிடம் இருப்பதாக நம்பப்படுகிறது. சிவனை, இம்மூன்று சக்திகளின் அருள் இருந்தால் மட்டுமே உணர முடியும் என சொல்லப்படுகிறது. அதனால்தான் மகா சக்தியை மக்கள் வணங்குகிறார்கள்.
நவராத்திரியை சிறப்பாக கொண்டாடும் விதமாக பக்தர்கள் பல்வேறு வகையான உணவுகளை தயாரித்து தேவியருக்கு படையல் போடுகின்றனர். இப்போது நவராத்திரி ஸ்பெஷல் சம்பா அவல் எப்படி செய்வதென்று பார்க்கலாம் வாங்க.
தேவையான பொருட்கள்
அவல் – ஒரு கப், நெய் – 4 டீஸ்பூன், முந்திரிப் பருப்பு – 12, கடுகு- தேவையான அளவு, கறிவேப்பிலை – தாளிக்க தேவையான அளவு, மிளகு- ஒரு டீஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன் (பொடித்தது) பச்சை மிளகாய் – 1(பொடியாக நறுக்கியது), எண்ணெய்- தேவையான அளவு, உப்பு – தேவையான அளவு.
செய்முறை
அவலை தண்ணீரில் 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும். கடாயில் நெய் விட்டு, முந்திரிப் பருப்பை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதே கடாயில், நெய்யுடன் எண்ணெய் சிறிதளவு சேர்த்து கடுகு, கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். ஊற வைத்த அவல், சீரகம், உப்பு, பொடித்த மிளகு சேர்த்து நன்கு வதக்கி இறக்கினால் சம்பா அவல் தயார்.
குறிப்பு: சம்பா அவலை வராத்திரி முதல் நாள் நிவேதனமாக செய்யலாம்.
மேலும் படிக்க
Chettinad Prawn Biryani: செட்டிநாடு இறால் பிரியாணி எப்படி செய்வது? செம டேஸ்டியா வரும் இப்படி செஞ்சா!
Pori Dosa :பொரியில் சுவையான தோசை செய்யலாம் தெரியுமா? வாங்க எப்படி செய்வதென்று பார்க்கலாம்...