உடல் ஆரோக்கியத்துக்கு கீரை மிகவும் அவசியமானது. உணவில் தினமும் கீரையை எடுத்து கொள்ள வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரையாக இருக்கும். ஆனால் சிலருக்கு கீரை சாப்பிட பிடிக்காது. குறிப்பாக குழந்தைகளுக்கு கீரை என்றாலே பிடிக்காது.


குழந்தைகளுக்கு கீரையை சாப்பிட கொடுக்க வித்தியாசமான ரெசிபியை செய்து கொடுக்கலாம். முருங்கை கீரையில் அதிகம் இரும்பு சத்து உள்ளது. அதை பக்கோடாவாக செய்து கொடுத்தால் குந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். ஒருமுறை இந்த முருங்கை கீரை பக்கோடா ரெசிபியை செய்து கொடுக்கலாம். 


முருங்கைக்கீரை பக்கோடாவு செய்ய தேவையான பொருட்கள்:


முருங்கைக்கீரை - ஒரு கப், கடலை மாவு - ஒரு கப், அரிசி மாவு- அரை கப், கான்ஃபிளார் - அரை கப், பச்சை மிளகாய் -3, பெரிய வெங்காயம் - ஒன்று, மிளகாய்த்தூள், கரம் மசாலா, உப்பு - தேவையான அளவு, சீரகம் - ஒரு டேபிள் ஸ்பூன், கொத்தமல்லி - ஒரு பிடி, எண்ணெய்



முருங்கைக்கீரை பக்கோடா செய்யும் முறை:


முதலில் ஒரு பவுலில் அலசி வைத்துள்ள முருங்கைக்கீரையை எடுத்து கொண்டு அதனுடன், மேலே குறிப்பிட்ட கடலை மாவு, அரிசி மாவு, கான்பிளார் மாவு, பொடிசாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும். அதனுடன், காரத்திற்கு ஏற்ப மிளகாய்த்தூள், கரம் மசாலா பொடி மற்றும் மஞ்சள் சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு கரண்டி சூடான எண்ணெயை அந்த கலவையில் ஊற்றி அதன் மீது கொத்தமல்லியை தூவி நன்றாக தண்ணீர் இல்லாமல் பக்கோடா போடும் பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும். 


பின்னர் அடுப்பில் கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் சூடானதும், பிசைந்து வைத்துள்ள முருங்கைகீரை கலவையை பக்கோடா போல் சிறியதாக பிடித்து காய்ந்த எண்ணெய்யில் போட்டு வறுத்தெடுக்க வேண்டும். முருங்கைகீரை பக்கோடா எண்ணெயில் வெந்ததும் எடுத்து மாலைநேர ஸ்நாக்ஸாக குழந்தைகளுக்கு கொடுக்கலாம். 


இந்த முருங்கை கீரை பக்கோடாவை சாம்பார் உள்ளிட்ட சாப்பாட்டிற்கு சைட்டிஷாகவும் சாப்பிடால் சுவையாக இருக்கும். 


மேலும் படிக்க: Crab Masala: சாதத்துக்கு சூப்பர் சைடிஷ்... சுவையான நண்டு மசாலா செய்முறை பார்க்கலாம்...


Coconut Thirattipal : இனிப்பு பிரியர்களா நீங்கள்... தேங்காய் திரட்டிப்பாலை சுவைத்துப் பாருங்கள்... டேஸ்ட் அள்ளும்!