இனிப்பு வகைகள் என்றால் எல்லோருக்கும் பிடிக்கும். விதவிதமான இனிப்பு வகைகளை சுவைக்க இனிப்பு பிரியர்கள் விரும்புவர். அப்படிப்பட்டவர்கள் தேங்காய் திரட்டிப்பாலை ஒரு முறை சுவைத்தால் அதன் சுவை நிச்சயம் உங்களை அசர வைக்கும். வாங்க சுவையான தேங்காய் திரட்டிப்பால் எப்படி செய்வதென்று பார்க்கலாம். 


தேவையான பொருட்கள்


தேங்காய் – 1 கப் (துருவியது)


தேங்காய் பல் – 1 டேபிள் ஸ்பூன்


முந்திரி – 20 (உடைத்தது)


வெல்லம் - முக்கால் கப்


அரிசி மாவு – 1 ஸ்பூன்


ஏலக்காய்ப்பொடி – 2 சிட்டிகை


நெய் – 1 டேபிள் ஸ்பூன்


தண்ணீர் கால் கப்


செய்முறை


முதலில் ஒரு கப் தேங்காய், முக்கால் கப் வெல்லம், ஒரு ஸ்பூன் அரிசி மாவு, கால் கப் தண்ணீர் என அனைத்தையும் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.


பின்னர் ஒரு கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி சூடாக்கி, அதில் தேங்காய் பல் மற்றும் முந்திரி சேர்த்து வறுத்து தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.


பின்னர் அதே கடாயில் உள்ள நெய்யில் அரைத்து வைத்துள்ள கலவையை சேர்த்து நன்றாக கிளற வேண்டும். தொடர்ந்து கிளறிக்கொண்டே இருந்தால் தேங்காய் திரட்டி பால் அல்வா பதத்துக்கு வந்துவிடும்.


அதில் ஏலக்காய்ப்பொடி, வறுத்த முந்திரி, தேங்காய் அனைத்தையும் தூவி இறக்க வேண்டும். அவ்வளவு தான் சுவையான தேங்காய் திரட்டிப்பால் தயார். 


இந்த தேங்காய் திரட்டிப்பாலை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் 


தேங்காயின் நன்மைகள் 


தேங்காயில், மாங்கனீசு, பொட்டாசியம், பாஸ்பரஸ், தாமிரம், இரும்பு, துத்தநாகம் உள்ளிட்ட ஏராளமான சத்துக்கள் உள்ளன. ஒரு ஆரோக்கியமான உடலுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் தேங்காயில் காணப்படுவதாக கூறப்படுகிறது. தேங்காய் செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைக்க உதவுவதாக கூறப்படுகிறது. 


தேங்காய் சதைப்பகுதியில் மாங்கனீசு மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்கள் உள்ளன. அவை நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது. ஆன்டி வைரஸ் மற்றும் பூஞ்சை காளான் எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் உடல்நல பிரச்சினைகளில் இருந்து பாதுகாப்பு அளிக்கும் என கூறப்படுகிறது. தேங்காய்  உடல் எடையை குறைக்க உதவும் என சொல்லப்படுகிறது. உடல் எடையை பராமரிக்க நினைப்பவர்கள் தேங்காயை உணவில் சேர்த்துக் கொள்ளலாம் என கூறப்படுகிறது. 


மேலும் படிக்க


”உங்களை நம்பிதான்... இதையெல்லாம் செய்க” - திமுக பொறுப்பாளர்களுக்கு அறிவுறுத்திய முதல்வர் ஸ்டாலின்


லஞ்சம் பெற்றாரா மஹுவா மொய்த்ரா? - திரிணாமுலின் நிலைப்பாட்டை வெளுத்து வாங்கும் பாஜக