முடவாட்டுக்கால் கிழங்கு மலைக்காடுகளில் கிடைக்க கூடியது. இது பார்ப்பதற்கு ஆட்டுக்கால் போன்று இருக்கும். இந்த கிழங்கை 6 மாதங்கள் வரை பக்குவமாக வைத்திருந்து பயன்படுத்தலாம் என்று சொல்லப்படுகிறது. இந்த கிழங்கை பயன்படுத்தி எப்படி சூப் செய்வது என்றும், இந்த கிழங்கின் பயன்கள் என்னவென்றும் பார்க்கலாம் வாங்க. 


தேவையான பொருட்கள் 


முடவாட்டுக்கால் - 200 கிராம்
இஞ்சி பூண்டு விழுது - 5 டீஸ்பூன்
மிளகு, சீரகம் - தலா 2 டீஸ்பூன்
தேங்காய் துருவல்- 3 டீஸ்பூன் 
கசகசா - 1 டீஸ்பூன் 
சின்ன வெங்காயம் - பொடியாக நறுக்கியது அரை கப்
தக்காளி - பொடியாக நறுக்கியது அரை கப்
இலவங்கப்பட்டை - சிறு துண்டு
பூண்டு - 3 பல்
உப்பு, மிளகுத்தூள், நல்லெண்ணெய் - தேவைக்கு ஏற்ப


செய்முறை


முடவாட்டுக்கால் கிழங்கு, ஆட்டுக்கால் போன்று இருக்கும். இதை நன்றாக கழுவி மேல் தோலில் இருக்கும் ரோமங்களையும் அதன் மேல் இருக்கும் கழிவுகளையும் நீக்கி சுத்தம் செய்து,  சிறு துண்டுகளாக வெட்டிகொள்ள வேண்டும். 

இஞ்சி, பூண்டு, கசகசா, தேங்காய்த்துருவல் அனைத்தையும் சேர்த்து மைய அரைத்து எடுத்துக் கொண்டு, சின்ன வெங்காயம், தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். 

இப்போது அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து, அதில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து சூடானதும், இலவங்கப்பட்டை சேர்த்து வதக்க வேண்டும்.


பிறகு சாம்பார் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி கொள்ளவும். இவை வதங்கியதும் முடவாட்டுக்கால், அரைத்த மசாலா சேர்த்து ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.


இதை 20 நிமிடங்கள் வரை கொதிக்க விட வேண்டும். பிறகு இறக்கி பூண்டு தட்டி  இதில் சேர்த்து, தேவையான அளவு உப்பு மிளகு தூள் தூவி குடிக்கவும். 


முடவாட்டுக்கால் பயன்கள் 


முடவாட்டுக்கால் கிழங்கு மூட்டு வலி, முழங்கால் வலி, குதிகால் வலி ஆகியவற்றிற்கு சிறந்த நிவாரணம் அளிக்கும் என சொல்லப்படுகிறது. 


இது குழந்தைகளுக்கு ஏற்படும் வாத நோய்க்கு அருமருந்து என்றும் சொல்லப்படுகிறது.


அதுபோல் கழுத்து வலி, தோள்பட்டை வலி, முதுகு வலி போன்றவற்றையும் குணப்படுத்த இது உதவுகிறது என்றும் சொல்லப்படுகிறது. 


மேலும் படிக்க 


Thenkuzhal Murukku : மொறு மொறு தேன் குழல் முறுக்கு : இப்படி செஞ்சு பாருங்க சுவை அள்ளும்..


Badam Kesari: புரதச்சத்து நிறைந்த பாதாமில் நாவில் எச்சில் ஊறும் சுவையில் கேசரி செய்யலாம்.. செய்முறை இதோ!


Beetroot Chutney : ஆரோக்கியமான பீட்ரூட் சட்னி.. இப்படி செய்தால் சுவை சூப்பரா இருக்கும்.. ட்ரை பண்ணுங்க..