ஒட்டுமொத்த உடல்நலன் மேம்பட, பாதுகாக்க ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை சாப்பிட வேண்டியது அவசியம். புரோட்டீ, வைட்டமின் ஆகியவற்றோடு கால்சியம் சத்தும் உடலுக்கு தேவையான அவசியமான ஒன்று.எலும்புகள் ஆரோக்கியமாக இருப்பதற்கு கால்சியம் நிறைந்த உணவுகளை தினமும் உணவில் சேர்க்க வேண்டும். பால், கேழ்வரகு இரண்டில் எது அதிக கால்சியம் நிறைந்தது. எதை சாப்பிடலாம் என்பது குறித்து இங்கே காணலாம்.
அன்றாட வேலைகளை ஆற்றலுடன் செய்வதற்கு கால்சியம் சத்து அவசியம். எலும்புகள், பற்களின் ஆரோக்கியமாக இருக்க கால்சியம் அவசியம். எலும்புகளில் கால்சியம் சத்து சேமித்து வைக்கப்படும். நாம் சாப்பிடும் உணவுகளில் போதுமான அளவு கால்சியம் இல்லையென்றால் எலும்புகளில் இருந்து சத்து உறிஞ்சிக்கொள்ளப்படும். இது ஆஸ்டியோபோரோசிஸ் அதாவது எலும்பு தேய்மானம் ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கும். அதனால், தினமும் உணவில் கால்சியம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். சீஸ், பப்பாளி, கிவி, கீரை வகைகள், ப்ரோக்கோலி ஆகியவற்றை உணவில் சேர்க்க வேண்டும்.
பால், கேழ்வரகு இரண்டில் எந்த உணவுப் பொருளில் கால்சியம் அதிமாக இருக்கிறது என்பதற்கு ஊட்டச்சத்து நிபுணர் தீப்ஷிகா அளிக்கும் விளக்கத்தை காணலாம்.
தினமும் பால் குடிக்கும் பழக்கம் இருப்பவர்களுக்கு போதுமான அளவு கால்சியம் கிடைக்கிறதா என்ற கேள்வி இருக்கும். 100 மிலி பாலில் 110 கிராம் கால்சியம் இருக்கிறது. இதுவே 100 கிராம் கேழ்வரகு சாப்பிட்டால் அதில் 350 மிகி கால்சியம் இருக்கிறது. மூன்று க்ளாஸ் அளவு பால் குடித்தால்தான் 300 கிராம் மிகி கால்சியம் கிடைக்கும்.
எல்லா வயதினரும் பால் குடிக்கலாமா என்றால் அவர்களின் உடல்நிலையை பொறுத்தது என பதிலளிக்கிறார் ஊட்டச்சத்து நிபுணர். கேழ்வரகு எல்லா வயதிருக்கும் ஏற்றது.சத்து மாவு, தோசை, இட்லி என சாப்பிடலாம். பொதுவாகவே பால் சிலருக்கு அலர்ஜி. அதுவும் செரிமானம் ஆகவும் நேரம் எடுக்கும். லாக்டோஸ் இண்டாலரன்ஸ் இருப்பவர்கள் கேழ்வரகு சாப்பிடலாம்.
கேழ்வரகில் கால்சியம் சத்து மட்டுமில்லை. நார்ச்சத்து, இரும்புச்சது, மெக்னீசியம் உள்ளிட்ட ஏராளமான சத்து நிறைந்துள்ளது.
பொறுப்புத்துறப்பு: இந்த உள்ளடக்கம் பொதுவான தகவல்களை உள்ளடக்கியது. இது மருத்துவ ரீதியான அறிவுரையோ, கருத்தோ அல்ல. தனிப்பட்ட உடல்நலம் சார்ந்த தகவல்களுக்கு மருத்துவரை அணுகுவது மட்டுமே சரியான தீர்வாகும். ஏபிபி பொதுத் தகவல்களுக்கான பொறுப்பை ஏற்காது.