மாலை நேர ஸ்நாக்ஸ் அல்லது ஏதாவது சாப்பிட வேண்டும் என்ற க்ரேவிங்க்ஸ் ஏற்படும்போது வாழைப்பழ மில்க் பிரெட் டோஸ்ட் செய்து சாப்பிடலாம். அதன் செய்முறையை காணலாம்.
வாழைப்பழ மில்க் டோஸ்ட்:
என்னென்ன தேவை?
பிரேட் - ஒரு பாக்கெட்
வாழைப்பழம் - 3
பால் - ஒரு கப்
தேன் - சிறிதளவு
நெய் அல்லது வெண்ணெய் - சிறிதளவு
செய்முறை:
பிரெட் இருந்தால் நல்லது. கோதுமை பிரெட் பயன்படுத்தலாம். வாழைப்பழத்தை தோல் நீக்கி அதை நன்றாக மசித்துக்கொள்ள வேண்டும். இல்லையெனில் பிரெட் மீது வைத்து மசிக்கலாம். அவ்வளவுதான் 5 நிமிடங்கள் டோஸ்ட் செய்துவிடலாம்.
அடுப்பில் மிதமான தீயில் தோசைக்கலை வைத்து வெண்ணெய் சேர்க்கவும். அதில் பிரெட் சேர்த்து அதன்மீது வாழைப்பழத்தை தடவவும். இப்போது இரண்டு புறமும் திருப்பி போடவும். சிறிதளவு பால் சேர்த்து டோஸ்ட் செய்யவும். பிரெட் நன்றாக பொன்னிறமாக மாறியதும் சுட சுட டோஸ்ட் தயார். பீனட் பட்டர், தேன், சாக்லெட் சிரப் ஆகியவற்றை டிரிசில் செய்து சாப்பிடலாம்.
மலாய் மாம்பழ பிரெட் டோஸ்ட்:
என்னென்ன தேவை?
பிரெட் - ஒரு பாக்கெட்
மாம்பழம் - 3
ஃப்ரெஷ் க்ரீம் - தேவையான அளவு
வெண்ணெய் - ஒரு கப்
ஏலக்காய் பொடி - சிறிதளவு
சர்க்கரை - சிறிதளவு
கன்டன்ஸ்டு மில்க் - தேவையான அளவு
செய்முறை:
மாம்பழத்தை நன்றாக சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும். நன்றாக பழுத்த மாம்பழத்தை தேர்ந்தெடுக்கவும். மிக்ஸியில் ஏலக்காய் சர்க்கரை ஒரு க்ரைண்ட் செய்து எடுத்துகொள்ளவும்.
இப்போது தோசை கல்லில் வெண்ணெய் தடவி பிரெட் துண்டுகளை டோஸ்ட் செய்து எடுக்கவும். பிரெட் பொன்னிறமாக மாறியதும் அதன் ஒருபுறம் ப்ரெஷ் க்ரீம் தடவி டோஸ்ட் செய்து எடுக்கவும். தேவையான பிரெட் துண்டுகளை ஃப்ரெஷ் க்ரீம் தடவி டோஸ்ட் செய்து எடுக்கவேண்டும்.
இப்போது பிரெட் மீது ப்ரெஷ் க்ரீம் தடவி அதன் மீது ஏலக்காய் பொடி, சர்க்கரை தூவி மாம்பழ துண்டுகளை வைக்கவும். அதன் மீது கன்டன்ஸ்டு மில்க் சேர்க்கவும். அவ்வளவுதான் எளிதான மாம்பழ டோஸ்ட் தயார்.