Mayiladuthurai : நவக்கிரகங்களை குறிக்கும் 9 தானியங்களில் செய்த லட்டு - எங்கே தெரியுமா...?

மயிலாடுதுறையில் "எங்கள் சமையலறை, எங்கள் பொறுப்பு" என்ற தலைப்பில் மயிலாடுதுறை மாவட்ட எரிவாயு விநியோகஸ்தர்கள் இணைந்து நடத்திய சமையல் போட்டியில் ஏராளமான பெண்கள் ஆர்வமுடன் பங்கேற்று பரிசுகளை பெற்றனர்.

Continues below advertisement

மயிலாடுதுறையில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் சார்பில் "எங்கள் சமையலறை, எங்கள் பொறுப்பு" என்ற தலைப்பில் மயிலாடுதுறை மாவட்ட எரிவாயு விநியோகஸ்தர்கள் இணைந்து நடத்திய சமையல் போட்டியில் ஏராளமான பெண்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

Continues below advertisement

மயிலாடுதுறையில் சமையல் போட்டி :

மயிலாடுதுறையில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் சார்பில் "எங்கள் சமையலறை, எங்கள் பொறுப்பு" என்ற தலைப்பில் மயிலாடுதுறை மாவட்ட எரிவாயு விநியோகஸ்தர்கள் இணைந்து நடத்திய பாதுகாப்புடன் கூடிய சமையல் போட்டி மயிலாடுதுறையில் நடத்தப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 13 விநியோகஸ்தர்கள் இணைந்து இந்த போட்டியை நடத்தினர்.

Rohit Sharma: இவ்ளோ கோபமா..! கேட்ச் விட்ட சர்ஃப்ராஸ் கான், மைதானத்திலேயே அடித்த ரோகித் சர்மா..! வீடியோ வைரல்


ஆர்வமுடன் பங்கேற்ற ஏராளமான பெண்கள்: 

இந்த போட்டியில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான பெண்கள் ஆர்வமுடன் கலந்துக்கொண்டு, சைவம் மற்றும் அசைவ உணவு வகைகளை தயாரித்து அசத்தினர். குறிப்பாக, வரகு கேசரி, கருப்பு கவுனி இட்லி, நவக்கிரகங்களை குறிக்கும் கோதுமை, அரிசி, துவரை, பச்சை பயறு, கொண்டை கடலை, மொச்சை, எள், உளுந்து, கொள்ளு ஆகிய 9 தானியங்களில் செய்த லட்டு, கருப்பு கவுனி கஞ்சி, கொள்ளு லட்டு, வரகு உப்புமா, ராகி களி-பொறுவாய் கருவாட்டு குழம்பு,நவதானிய தேங்காய் பால் பாயசம், மரவள்ளி கிழங்கு புட்டு, சப்ஜி-டால் ஃப்ரை, திணை கேசரி, ராகி லட்டு பச்சை பயிறு புட்டு உள்ளிட்ட சைவ அசைவ உணவு வகைகள் நடுவர்களையும் பார்வையாளர்களையும் ரசித்து, ருசிக்க வைத்தது. 

Railway: வெளுத்து வாங்கிய பொதுமக்கள் - அடித்து பிடித்து அறிக்கை வெளியிட்ட ரயில்வேதுறை, வந்த மாற்றம் என்ன?

பரிசுகளும், சான்றிதழ்களும்: 

முடிவில் மூன்று சிறந்த போட்டியாளர்களுக்கு பரிசுகளும், அனைவருக்கும் பங்கேற்பாளர்களுக்கான பரிசுகளும் வழங்கப்பட்டன. மேலும் இது குறித்து போட்டியில் பங்கேற்ற பெண்கள் கூறுகையில், அன்றாடம் நாங்கள் குடும்பத்தினருக்காக ஆசையாக சமைப்போம், ஆனால், அதனை உண்டு எங்கள் உணவு குறித்து சிறிய பாராட்டுகளே அல்லது நல்ல இருந்ததாக கூட கூறுவது கடினம். இந்த சூழலில் எங்களின் சமையல் திறனை வெளிக்காட்டி அதற்கான பாராட்டுகளும், பரிகளும் வழங்கிய இதுபோன்ற நிகழ்வுகளை அதிகப்படுத்த வேண்டும் என தெரிவித்தனர்.


இதையும் படிங்க:Karthigai Deepam: நெருங்கும் கார்த்திகை தீபம்! களைகட்டும் திருவண்ணாமலை! பரணி தீபம், மகா தீபம் எப்போது?

 

Continues below advertisement
Sponsored Links by Taboola