கடை வீதிகளில் கிடைக்கும் மசாலா பொரியை நாம் அனைவருமே சுவைத்திருப்போம். பொரி, வேர்க்கடலை, வெங்காயம், மசாலா உள்ளிட்டவை சேர்ந்த இந்த கலவை சாப்பிடுவதற்கு மொறு மொறுவெனவும் சுவையாகவும் இருக்கும். இதன் சுவை பிடிக்காதவர்கள் இருக்கவே முடியாது எனலாம். மழை பெய்யும் போது, அல்லது மாலை வேளையில் இந்த மசாலா பொரி சாப்பிட்டால் நல்லா இருக்குமே என சிலர் நினைப்பதுண்டு. ஆனால் இதற்காக கடைவீதி வரை செல்ல வேண்டுமா? என்றும் எண்ணத் தோன்றும். இனி நீங்க மசாலா பொரி சாப்பிட ஆசைப்பட்டால் அதை வீட்டிலேயே செய்து சாப்பிடலாம். வாங்க மசாலா பொரி எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
ஒரு அகலமான பாத்திரத்தில் 2 கப் அளவு பொரியை எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் வேர்க்கடலை – 2 டேபிள் ஸ்பூன், பொட்டுக்கடலை – 2 டேபிள் ஸ்பூன், பொடியாக நறுக்கிய தக்காளி பழம் – 1,( தக்காளி பழத்தில் உள்ள விதைகள் மற்றும் தண்ணீரை அக்கற்றி விட்டு பழத்தை மட்டும் பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும்) பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 1.
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை சிறிதளவு, கேரட் துருவல் 1/2 கப், மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன், உப்பு இரண்டு சிட்டிகை . நல்லெண்ணெய்க்கு பதிலாக தேங்காய் எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன் சேர்த்து மசாலா பொரி செய்தால் இதன் சுவை கூடுதலாக இருக்கும்.
செய்முறை
மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை எல்லாம் ஒரு பாத்திரத்தில் சேர்த்து ஒரு கரண்டியை கொண்டு நன்றாக கலந்து விட வேண்டும். இறுதியாக எலுமிச்சை பழச்சாறை மேலே லேசாக பிழிந்து விட்டு, ஒருமுறை கிளரி விட்டு உடனடியாக பரிமாறி விட வேண்டும். அவ்வளவு தான் சுவையான மசாலா பொரி ரெசிபி தயார்
காரப்பொரி ரெசிபி
ஒரு அகலமான கடாயில் 2 டேபிள்ஸ்பூன் அளவு தேங்காய் எண்ணெய் ஊற்றி, சூடாக்க வேண்டும். அதில் பூண்டு பல் – 6 (தோலுரித்து பொடியாக நறுக்கியது), வரமிளகாய் – 3 , வேர்க்கடலை – 1/4 கப், பொட்டுக்கடலை – 1/4 கப், கறிவேப்பிலை – 1 கொத்து, மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்,2 சிட்டிகை உப்பு எல்லாவற்றையும் அந்த எண்ணெயில் போட்டு இரண்டு நிமிடங்கள் வறுத்து, 1/2 படி பொரியை அதில் சேர்த்து ஒரு நிமிடம் கிளறி விட்டுக் கொண்டே இருக்க வேண்டும். பின் இறக்கி விட வேண்டும்.
அவ்வளவுதான் சுவையான காரப்பொரி தயார். காரப்பொறி மற்றும் மசாலா பொறி இரண்டையும் மாலையில் டீ உடன் சாப்பிடலாம். நல்ல காம்பினேஷனாக இருக்கும்.
மேலும் படிக்க
இந்திய மொழிகளில் சட்டங்களை இயற்ற முழுமனதுடன் முயற்சி செய்கிறோம்: மனம் திறந்த பிரதமர் மோடி
Car loan Information:
Calculate Car Loan EMI