நாம் ஹோட்டலுக்கு சாப்பிட சென்றால் பலூடா சாப்பிட மறப்பதே இல்லை. அந்த அளவிற்கு அதன் சுவை ஏராளமானோருக்கு பிடிக்கும். ஒரு பலூடா முழுதாய் சாப்பிட்டாலே வயிறு நிறைந்த உணர்வு வந்து விடும். பலூடாவின் இனிப்பு ,நட்ஸ் , புரூட்ஸ் சேர்ந்த கலவை ஒரு நல்ல சுவையை கொடுக்கின்றது.

 

பலூடா புரூட்ஸ், சேமியா ஆகியவற்றை அடுக்கடுக்காக கொண்டு தயாரிக்கப்படுகிறது. இதன் நிறம், ஃப்ளேவர் ஆகிவற்றை பார்க்கும் போது சுவைத்து பார்த்து விட வேண்டும் என ஆசை ஏற்படும். சொல்லப்போனால் ஐஸ்கிரீமை காட்டிலும் அதிகமானோருக்கு பலூடாவை அதிகமாக பிடிக்கின்றது. 

 

இதை தயாரித்து பரிமாறும் விதத்தை பார்க்கும் போது இதை ஹோட்டலில் மட்டும் தான் தயார் செய்ய முடியும் என்ற பிரம்மிப்பு ஒரு சிலருக்கு ஏற்படலாம். ஆனால் பலூடாவை வீட்டிலேயே தயாரிக்க முடியும். பலூடாவில், பாதாம் பலூடா, மேங்கோ பலூடா, பைனாப்பிள் பலூடா, மிக்ஸ்டு ஃப்ரூட் பலூடா என பல வகைகள் உள்ளன. இதில் மேங்கோ ஃப்ளேவர் பொதுவாக எல்லோருக்குமே பிடிக்கும். வாங்க மேங்கோ பலூடா எப்படி செய்வதென்று பார்க்கலாம். 

 

தேவையான பொருட்கள்

 

மாம்பழம் 1, 1/4கப் சேமியா வடித்தது, 3/4கப் பாதாம் பிசின் 6 மணி நேரம் ஊற வைத்தது, 1/2கப் சப்ஜா விதை 10 நிமிடம் ஊற வைத்தது, 1/4கப் பால்  மில்க்மெய்ட் கலந்தது, 1கப் ஜெல்லி துண்டுகள், 1/2 கப் விருப்பப்பட்ட பழங்கள் பொடியாக நறுக்கியது,  3 ஸ்கூப் மேங்கோ அல்லது வெண்ணிலா ஐஸ்க்ரீம்.

 

செய்முறை

முதலில் மாம்பழத்தை சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் நன்கு அடித்து எடுத்துக் கொள்ள வேண்டும். 


மிக்ஸியில் அரைத்த மாம்பழத்தை, கண்ணாடி டம்ளரில்  மூன்று ஸ்பூன் சேர்க்க வேண்டும்.  அதன் மேல் 2 ஸ்பூன் வடித்து வைத்திருக்கும் சேமியாவை சேர்க்க வேண்டும்.  அதன் மேல் 2 ஸ்பூன் சப்ஜா விதை சேர்க்க வேண்டும்.  இரண்டு ஸ்பூன் பால் மற்றும் மில்க்மெய்ட் கலந்து வைத்திருக்கும் கலவையை இதனுடன்  சேர்க்க வேண்டும். பின் இதனுடன்  ஜெல்லி துண்டுகளை சேர்க்க வேண்டும். வெண்ணிலா அல்லது மேங்கோ ஐஸ்க்ரீம் சேர்க்க வேண்டும்.  சுவையான மேங்கோ பலூடா தயார்.


விருப்பப்பட்டால் பழங்களை பொடியாக நறுக்கி பலூடாவின்  மேலே தூவிக் கொள்ளலாம்.  முந்திரி பிஸ்தா பாதாமை பொடித்து பலூடாவின் மேல் தூவிக் கொள்ளலாம்.


மேலும் படிக்க 


இறக்கும் முன் உறுப்பு தானம் செய்பவர்களின் இறுதிச்சடங்குகளில் இனி அரசு மரியாதை.. முதலமைச்சர் அறிவிப்பு


EXCLUSIVE: விக்ரம், பிரக்யானுக்கு முடிவுரை? நிலவில் நிரந்தரமாக இருப்பது சாத்தியமா? விஞ்ஞானி வெங்கடேஸ்வரன் சிறப்புப் பேட்டி